பாதிரியார் கொலை வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை
புவனேஸ்வர்:
பாதிரியார் கிரஹாம் ஸ்டெயின்ஸ் மற்றும் அவரது மகன்கள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் முக்கியகுற்றவாளியான தாரா சிங்குக்கு சிறப்பு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
மேலும் 12 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பாதிரியார் கிரஹாம் ஸ்டெயின்ஸ் மற்றும் அவரது 2 மகன்கள் பிலிப் (வயது 11),திமோதி (7) ஆகியோரை தாார சிங் தலைமையிலான கும்பல் உயிரோடு எரித்துக் கொன்றது.
கடந்த 1965ம் ஆண்டு முதல் ஒரிஸ்ஸாவில் மலை வாழ் மக்களிடையே சேவையில் ஈடுபட்டு வந்தவர்ஸ்டெயின்ஸ். தனது மனைவி மகன்களுடன் ஒரிஸ்ஸாவிலேயே தங்கியிருந்தார்.
2001ம் ஆண்டு ஜனவரி மாதம் 22ம் தேதி ஸ்டெயின்ஸ் மற்றும் இரு மகன்களும் ஒரிஸ்ஸாவின் கியோஞ்சர்மாவட்டத்தில் ஒரு தேவாலயத்தின் எதிரே தங்களது ஜீப்பில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது ஜீப்புக்கு இந்தக்கும்பல் தீ வைத்தது.
இதில் ஸ்டெயின்ஸ் மற்றும் 2 குழந்தைகளும் துடிதுடித்து உயிரிழந்தனர். நாடு முழுவதும் பெரும் பரபரப்பைஏற்படுத்திய இந்த வழக்கில் தாரா சிங்க்கு இப்போது தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications