பொடாவை உடனே வாபஸ் பெற வேண்டும்: கருணாநிதி
விழுப்புரம்:
அயோத்தியில் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்டுவதை திமுக அனுமதிக்காது என கருணாநிதிகூறினார்.
திமுக மாநாட்டில் நிறைவுரையாற்றிய அவர் கூறியதாவது:
பொடா சட்டத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். இந்த விஷயத்தில் தமிழக அரசின் முறை தவறியசெயல்களை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இந்தச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டது உறுதியானால்,சட்டத்தை வாபஸ் பெறுவது குறித்து யோசிப்பேன் என பிரதமர் வாஜ்பாய் என்னிடம் உறுதிமொழி தந்தார்.
நக்கீரன் கோபாலை பொடா சட்டத்தில் கைது செய்தது தவறு என தமிழக அரசை உயர் நீதிமன்றம் கண்டித்துள்ளது.அவருக்கு ஜாமீனும் தந்துள்ளது. பொடா சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதற்கு இதைவிட என்னஉறுதியான ஆதாரம் வேண்டும்.
பொடா விவகாரத்தில் வாஜ்பாய் எங்களை கைவிட்டுவிட்டதாகவே நினைக்கிறோம்.
தமிழ் 2,000 ஆண்டு பழமை வாய்ந்தது. நாட்டின் செம்மொழிகளில் ஒன்றாக இருக்க தமிழுக்கு முழுத் தகுதியும்உண்டு. உலகின் தொன்மையான இந்த மொழியை மத்திய அரசு உடனே செம்மொழியாக அறிவித்து உரியஅங்கீகாரம் தர வேண்டும்.
அயோத்தி விவகாரத்தில் திமுக தனது நிலையில் தெளிவாகவே உள்ளது. சர்ச்சைக்குரிய இடத்தில் கோவில் கட்டக்கூடாது. இது தொடர்பாக பா.ஜ.க. சட்டம் கொண்டு வர முயன்றால் அதை திமுக திட்டவட்டமாக எதிர்க்கும்.நீதிமன்றத்தின் தீர்ப்பை அனைத்துத் தரப்பினரும் மதித்து நடக்க வேண்டும் என்பது தான் எங்கள் நிலை.
மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்ட முனைந்தால் மதக் கலவரம் தான் வெடிக்கும். ராமருக்குநாங்கள் எதிரிகளும் அல்ல. அவருக்கு சர்ச்சைக்குள்ளான இடத்தில் தான் கோவில் கட்ட வேண்டுமா?
தேர்தல் நிதி 30 கோடி வசூல்:
இதுவரை தேர்தல் நிதியாக மாநிலம் முழுவதும் ரூ.30 கோடி 50 ஆயிரம் வசூலாகியுள்ளது. இதில் சேலம்மாவட்டம்தான் நிர்ணயிக்கப்பட்ட 1 கோடியைத் தாண்டி ரூ.2 கோடியே 25 லட்சம் வசூல் செய்து கொடுத்துசாதனை படைத்துள்ளது என்றார் கருணாநிதி.
-
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
முதல்வர் விஜய்யை சுற்றி தலைமை செயலகத்தில் 4 பவர் சென்டர்கள்.. முன்னாள் அமைச்சர் உதயக்குமார் புகார் -
திடீர் ட்விஸ்ட்.. அண்ணாமலையுடன் கைகோர்க்க போகும் ராகவா லாரன்ஸ்? நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார்? -
மத்திய அரசுடன் இணக்கமான உறவு வச்சுக்கலாம்.. விஜய் எடுத்த புதிய ரூட்! காரணத்தை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க -
இருக்குற இடம் தெரியாம இருந்துட்டு போயிடனும்.. பாஜக மீது லேசான பாசம்! ‘இந்தியா’வுக்கு நோ சொன்ன விஜய்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
சென்னை மக்கள் பொறுமை இழந்தனர்.. கட்டி முடிச்சு 4 மாசமாச்சு.. எப்ப தான் திறப்பீங்க! -
ஸ்மார்ட் மீட்டர், பரந்தூர், ECR பாலம்! முக்கிய திட்டங்களை முடக்கிய விஜய்! தமிழ்நாட்டிற்கு பேராபத்து -
தவெக ஆட்சி சிறப்பாக இருக்கு.. இன்னும் கொஞ்சம் டைம் கொடுக்கனும்! விஜய்யை சந்தித்த அன்புமணி பாராட்டு -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
சிங்கப்பெண் அதிரடி படைக்கு ரூ.354 கோடி ஒதுக்கீடு.. 2500 புதிய பணியிடங்கள் உருவாகிறது! முதல்வர் விஜய் -
நாளை திடீரென டெல்லி செல்லும் முதல்வர் விஜய்.. பிரதமர் மோடி, அமித் ஷாவை சந்திக்கிறார்.. என்ன காரணம்












Click it and Unblock the Notifications