வரதட்சணை கொடுமை: அதிமுக எம்.எல்.ஏவின் கணவர் கைது
புதுக்கோட்டை:
அதிமுக எம்.எல்.ஏ கருப்பாயியின் கணவர் கருப்பையா, வரதட்சணைக் கொடுமை வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. கருப்பாயி. இவரது கணவர் பெயர் கருப்பையா.
கருப்பையாவுக்கு 1983ம் ஆண்டே திருமணமாகி விட்டது. அவரது முதல் மனைவி பெயர் கலையரசி. இதன்பின்னர் தான் கருப்பாயி உடன் வசிக்க ஆரம்பித்தார் கருப்பைய்யா. இந் நிலையில் கருப்பாயி அதிமுகவில் சீட்பெற்று எம்.எல்.ஏவும் ஆகிவிட்டார்.
கணவர் தொடர்பாக கருப்பாயிக்கும் கலையரசிக்கும் இடையே அவ்வப்போது மோதல் நடப்பதும் வழக்கம்.
இந்த நிலையில் கருப்பையா தன்னை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாகவும், எம்.எல்.ஏ. விடுதிக்குவந்து ரகளை செய்ததாகவும், தனது காரை எடுத்துச் சென்று மோதி விட்டதாகவும் சென்னை ஆயிரம் விளக்குஅனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் எம்.எல்.ஏ. கருப்பாயி.
இதைத் தொடர்ந்து ஆயிரம் விளக்கு காவல் நிலைய போலீஸார், புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகணம்பகுதிக்குச் சென்று கருப்பையாவைக் கைது செய்து சென்னை கொண்டு சென்றனர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications