சென்னையில் பயங்கர தீ விபத்து: 3 பேர் பரிதாப சாவு
சென்னை:
சென்னை, வியாசர்பாடி பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 2 பேர் உடல் கருகி இறந்தனர். இந்த தீவிபத்தைப்பார்த்த அதிர்ச்சியில் ஒருவர் மாரடைப்பால் இறந்தார்.
வியாசர்பாடியில் உள்ள சஞ்சய் நகரில் அதிகாலையில் இந்தப் பெரும் தீவிபத்து ஏற்பட்டது. காற்று வேகமாகவீசியதால் குடிசை வீடுகளுக்கு தீ வேகமாக பரவியது.
தீ பரவத் தொடங்கியதும், வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் வெளியேறினர். தீயணைப்புப் படையினருக்குத்தகவல் போனது. கொருக்குப்பேட்டை, வியாசர்பாடி, செங்குன்றம் ஆகிய தீயணைப்பு நிலையங்களிலிருந்துதீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப்பட்டன.
தீ மளமளவென்று பரவியதில், ஏராளமான குடிசை வீடுகள் கருகின. இதில் சாமுவேல் (51), அவரது மகன் டக்ளஸ்(வயது 21) ஆகிய இருவரும் தூங்கிய நிலையில் கருகி இறந்தனர். சாமுவேலின் மனைவி வசந்தா வீட்டை விட்டுவெளியேறியதால் தப்பினார். இருப்பினும் அவர் கீழே விழுந்ததில் கால் முறிந்தது. மேலும் 2 பேருக்கும் தீக்காயம்ஏற்பட்டது.
இந்த நிலையில் தீவிபத்தைப் பார்த்ததும் முருகன் என்பவருக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. இதில் அவர்மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிர் விட்டார். இந்த தீவிபத்தில்150க்கும் மேற்பட்ட குடிசைகள், கோழிக்கடையில் இருந்த 30 கோழிகள், ஏராளமான சைக்கிள்கள், சில மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்தன. சிறிய சர்ச்ஒன்றும் தீக்கிரையானது.
சம்பவம் நடந்த இடத்தை வட சென்னை மாவட்ட போலீஸ் இணை ஆணையர் சைலேந்திரபாபு சென்றுபார்வையிட்டார். அமைச்சர் ஜெயக்குமார், துணை மேயர் கராத்தே தியாகராஜன், மாநகராட்சி ஆணையர்விஜயக்குமார் ஆகியோரும் அப் பகுதிக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண உதவிகளைவழங்கினர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications