கண்ணப்பன் மீது பாய்கிறது பொடா: வாஜ்பாய்க்கு ஜெயலலிதா அதிரடி கடிதம்
சென்னை:
மத்திய அமைச்சர் கண்ணப்பன் தொடர்ந்து விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசி வருவதால், அவர் மீதுபொடா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக பிரதமர் வாஜ்பாய்க்கு முதல்வர்ஜெயலலிதா நேரடியாகக் கடிதம் எழுதியுள்ளார்.
மதிமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் கண்ணப்பன் சமீபத்தில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் பேசுகையில், விடுதலைப்புலிகளை ஆதரிப்பதை கைவிட மாட்டேன். இதனால் பொடா சட்டம் பாய்ந்தாலும் கவலையில்லை என்றுகூறியிருந்தார்.
இதையடுத்து அவரை பொடாவில் கைது செய்யவும், அதற்குத் தேவையான ஆதரங்களைத் திரட்டவும்போலீசாருக்கு ஜெயலலிதா உத்தரவிட்டார். மேலும் அவரைக் கைது செய்ய வசதியாக மத்திய அமைச்சர் பதவியில்இருந்து நீக்க வேண்டும் எனவும் மத்திய உள்துறைக்கு தமிழக உள்துறையில் இருந்து சார்பில் கடிதம்அனுப்பப்பட்டது.
இந் நிலையில் பிரதமர் வாஜ்பாய்கே முதல்வர் ஜெயலலிதா நேரடியாகக் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், மத்திய அமைச்சர் எம்.கண்ணப்பன் தொடர்ந்து விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசி வருகிறார். மத்தியஅமைச்சர் ஒருவரே இப்படிப் பேசி வருவது கடுமையான கண்டனத்துக்குரியது. எனவே, கண்ணப்பனைஉடனடியாக மத்திய அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்.
தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவாக கண்ணப்பன் தொடர்ந்து பேசி வருவதுநல்லதல்ல. அவரது செயல் பொடா சட்டத்தின் 18வது, 21வது பிரிவுகளின் கீழ் பெரும் தேச விரோதக் குற்றமாகும்.அவரை மத்திய அமைச்சர் பொறுப்பிலிருந்து மத்திய அரசு நீக்காவிட்டாலும் அவர் மீது பொடா சட்டத்தின்படிநடவடிக்கை எடுக்க தமிழக அரசு தயங்காது.
தமிழகத்தைப் பொறுத்தவரை சட்டத்தை மதிக்கும் மாநில அரசாகும். இதனால் இந்த அமைச்சரைக் கைது செய்வதேசரி என தமிழகம் நினைக்கிறது. மத்திய அமைச்சர் பதவியில் இருப்பதால் தன்னை யாரும் ஏதும் செய்துவிடமுடியாது என நினைத்துக் கொண்டு தான் கண்ணப்பன் இவ்வாறு புலிகளை ஆதரித்து பகிரங்கமாகப் பேசிவருகிறார்.
உங்கள் தலைமையில் உள்ள அரசில் பதவி வகிக்கும் அமைச்சர் தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாகப்பேசி, அரசியல் சட்டத்தையே கேலிக் கூத்தாக்கி வருவதை நீங்கள் தடுத்தாக வேண்டும். புலிகளை ஆதரித்தன்மூலம் அமைச்சராக இருக்கும் தகுதியையே அவர் இழந்துவிட்டார்.
இதனால் அவரை உடனே பதவியை விட்டு நீக்கி, நாட்டின் சட்டத்தை நிலை நிறுத்த உதவுமாறு பிரதமர்வாஜ்பாயைக் கேட்டுக் கொள்கிறேன். அரசியல் காரணங்களுக்காக கண்ணப்பனை பிரதமர் பதவி நீக்கம் செய்யமறுத்தால், அதை தமிழக அரசு பொறுமையாக பார்த்துக் கொண்டிருக்காது. உரிய நடவடிக்கை எடுத்துகண்ணப்பனைக் கைது செய்யும்.
சட்டவிரோத செயலில் ஈடுபடும் மத்திய அமைச்சரை மாநில அரசு கைது செய்வதை எந்த சட்டம் தடுக்காது என்றுகூறியுள்ளார் ஜெயலலிதா.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications