ரூ. 1,200 கோடியில் சென்னை அருகே உருவாகிறது துணை நிர்வாக நகரம்
சென்னை:
சென்னை அருகே கிழக்குக் கடற்கரைச் சாலையில் ரூ. 1,200 கோடியில், 900 ஏக்கர் பரப்பளவில் துணை நிர்வாகநகரம் அமையவுள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
தமிழக அரசின் புதிய தலைமைச் செயலகம், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமையவுள்ளது. இதைத்தொடர்ந்து அரசின் அனைத்துத் துறை அலுவலகங்களையும் ஒரே இடத்தில் அமைக்கும் பொருட்டு மாமல்லபுரம்அருகே, கிழக்குக் கடற்கரைச் சாலையில் தையூர் மற்றும் திருவிடைத் தாங்கல் ஆகிய ஊர்களில், 900 ஏக்கர்பரப்பளவில் ரூ. 1,200 கோடியில் துணை நிர்வாக நகரத்தை அரசு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய துணை நிர்வாக நகரத்தில், அனைத்துத் துறைச் செயலாளர்கள் அலுவலகங்கள், காவல்துறைத் தலைவர்அலுவலகம், ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளின் அலுவலகங்கள், இல்லங்கள் ஆகியவை அமையஉள்ளன.
இதுதொடர்பான அரசாணை நேற்று பிறப்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, தையூர், திருவிடைத்தாங்கலில் புதியஅரசுத் திட்டங்களை மேற்கொள்வதை அரசு நிறுத்தி வைத்துள்ளது. மேலும், இப்பகுதிகளில் யாரும் நிலங்களைவாங்கவோ அல்லது விற்கவோ கூடாது என்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இன்னும் 15 நாட்களில் துணை நிர்வாக நகரம் அமைப்பதற்கான டெண்டர் விடப்படவுள்ளது. அதன் பிறகுஇதுதொடர்பான பணிகள் முடுக்கி விடப்படும்.
-
தெற்கில் வேகமெடுக்கும் தவெக வியூகம்.. நாதக நிர்வாகிகளை இழுக்க முதல்வர் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்! -
பாரதிராஜா உடலுக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும்.. முதல்வர் விஜய் அறிவிப்பு! -
பாஸ் ஆயிட்டாரா CM விஜய்? 1 மாத கால தவெக ஆட்சி எப்படி இருக்கு? 30 நாளில் திணறடித்த 4 அமைச்சர்கள் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
சிங்கப்பெண் அதிரடி படைக்கு ரூ.354 கோடி ஒதுக்கீடு.. 2500 புதிய பணியிடங்கள் உருவாகிறது! முதல்வர் விஜய் -
நாளை திடீரென டெல்லி செல்லும் முதல்வர் விஜய்.. பிரதமர் மோடி, அமித் ஷாவை சந்திக்கிறார்.. என்ன காரணம் -
பிரதமர் மோடி தலைமையில் இன்று நிதி ஆயோக் குழு கூட்டம்.. முதல்வர் விஜய் பங்கேற்பு! அஜெண்டா என்ன? -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு! காங். தலைவர்களை சந்திப்பாரா? -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு! -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட்












Click it and Unblock the Notifications