3வது ஆண்டாக குறுவை பயிரை இழக்கிறது தமிழகம்: பிரதமரை சந்திக்க எதிர்க் கட்சிகள் முடிவு
சென்னை:
காவிரியில் தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடகத்துக்கு உத்தரவிடக் கோரி திமுக, பா.ம.க, மதிமுக,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பா.ஜ.க. ஆகிய கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் குழு பிரதமர் வாஜ்பாயை நேரில்சந்திக்கவுள்ளது.
அக்டோபர் முதல் வாரத்தில் இச் சந்திப்பு நடக்கிறது.
இன்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூட்டிய அனைத்து எதிர்க் கட்சிகள் கூட்டத்தில் இந்த முடிவுஎடுக்கப்பட்டது.
கூட்டத்துக்குப் பின் நிருபர்களிடம் பேசிய ராமதாஸ், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையும் கூட மதிக்க மறுத்து வரும்கர்நாடகத்தின் செயல் நாட்டின் கூட்டாட்சி முறைக்கே எதிராக உள்ளது. இதனால் தமிழக காவிரிப் படுகைவிவசாயிகள் சந்தித்து வரும் துயரம் சொல்லி மாள முடியாதது.
இந்த ஆண்டு ஜூன் முதல் செப்டம்பர் வரை தமிழகத்துக்கு கர்நாடகம் 157 டி.எம்.சி. நீரைத் தந்திருக்க வேண்டும்.ஆனால், வெறும் 24 டி.எம்.சி. நீரைத் தான் இதுவரை தந்துள்ளது. அதுவும் மழை பெய்யயும்போது தனதுஅணைகளில் இதற்கு மேல் நீரைத் தேக்க முடியாது என்ற நிலை வரும்போது மட்டும் பெயருக்கு தண்ணீரைத்திறந்துவிட்டு வருகிறது.
இதனால் இந்த ஆண்டும் குறுவைப் பயிரை இழந்துவிட்டு நிற்கிறார்கள் தமிழக காவிரிப் பாசன க விவசாயிகள்.மொத்தத்தில் 3வது ஆண்டாக பயிரிட முடியாத மிக மோசமான சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆறுகளை தனது கட்டுப்பாட்டில் எடுப்பது குறித்து மத்திய அரசு யோசிக்க வேண்டும். அரசியல்சட்டப்படி மத்திய அரசுக்கு அந்த உரிமை உண்டு.
நதிகளை இணைப்பது எல்லாம் மிக நீண்ட காலம் பிடிக்கும் வேலை. இதனால், உடனடியாக ஆறுகளை தனதுகட்டுப்பாட்டில் எடுத்து அனைத்து மாநிலங்களுக்கும் உரிய நீர் கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த வேலையை உடனடியாகச் செய்ய வேண்டும். இதற்கு தேவைப்பட்டால் அரசியல் சட்டத்தில்திருத்தம் கூட கொண்டு வரலாம் என்றார் ராமதாஸ்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications