கதையை ஜெவுக்கு எதிராக திருப்பி விட்ட கருணாநிதி!
சென்னை:
சிவகங்கையில் நடந்த அரசு விழாவில், திமுகவுக்கு எதிராக முதல்வர் ஜெயலலிதா கூறிய குட்டிக் கதைகளைஅவருக்கு எதிராகத் திருப்பி நக்கல் விளக்கம் தந்தார் திமுக தலைவர் கருணாநிதி.
மகன் (ஸ்டாலின்) பக்கத்து வீட்டிற்கு சென்று முட்டைகள் திருடுவதைப் பார்த்த அவனது தந்தை (கருணாநிதி),அந்தக் கோழியையே (திமுக) திருடி வந்து தனது மகனிடம் கொடுப்பதாக ஒரு கதையும், சூரியனிடம் (திமுக) யார்சென்றாலும் அது பொசுக்கி விடும் என்று தா.கி. கொலைக்ை குறிப்பிட்டும் இரு கதைகைளைச் சொல்லியிருந்தார்ஜெயலலிதா.
இரு கதைகளுக்கும் திமுக தலைவர் கருணாநிதி கிண்டலாக பதிலடி தந்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ளஅறிக்கை:
சூரியனிடம் பகலில் போனால் பொசுக்கி விடும்,இரவில் போனால் சுடாது என்று ஒரு புத்திசாலி கூறியதாகஜெயலலிதா கூறியுள்ளார். அது உண்மைதான். பகலில் சூரியனை நெருங்கும் இலை கருகி விடும் என்றஉண்மையை உணர்ந்துதான் அந்தக் கதையை ஜெயலலிதா கூறியுள்ளார்.
அதேபோல, கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு சத்துணவுடன் சேர்த்து வாரம் ஒரு முறைமுட்டை கொடுக்கப்பட்டு வந்தது. ஆனால், பின்னர் வந்த அதிமுக ஆட்சியில் முட்டையை நிறுத்தி விட்டார்கள்.
அந்த முட்டை எங்கே போயிற்று, கோழியை என்ன செய்தார்கள் என்பதை உணர்த்தும் விதமாகவே கோழிமுட்டைக் கதையை ஜெயலலிதா கூறியிருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது.
ஜெயலலிதாவுக்கு கதைகளை எழுதித் தருவோர், அந்தக் கதைகள் ஜெயலலிதாவுக்கு எதிராக மாறுவதை உணரவேண்டும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
-
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications