மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் தான் ராமர் கோவில் கட்ட வேண்டும்: அத்வானி
சோம்நாத் (குஜராத்):
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் தான் ராமர் கோவிலைக் கட்ட வேண்டும் என துணைப்பிரதமர் அத்வானி கூறினார்.
கடந்த வாரம் தான் அவர் மசூதி இடிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதற்கு சிபிஐயே காரணம் என்றுகுற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில் இன்று அத்ாவனி இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.
1989ம் ஆண்டில் தான் நடத்திய ரத யாத்திரையின் நினைவு தினத்தையொட்டி குஜராத்தில் சோம்நாத் என்றஇடத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்க அத்வானி ராணுவத்துக்கு சொந்தமான எம்.ஐ.-18 ரகஹெலிகாப்டரில் சென்றார்.
அவரது அதிகாரிகளும், 10 நிருபர்களும் இன்னொரு எம்.ஐ.-18 ரக ஹெலிகாப்டரில் பயணம் செய்தனர்.
இன்று காலை ராஜ்கோட் அருகே ரபார்கா என்ற கிராமத்தின் மீது ஹெலிகாப்டர் பறந்து கொண்டிருந்தபோதுநிருபர்கள் சென்ற ஹெலிகாப்டரில் கோளாறு ஏற்பட்டது. கியர் பாக்சில் பெரும் பிரச்சனை ஏற்பட்டதால்உடனடியாகத் தரையிறக்க வேண்டிய நிலை உருவானது.
இதையடுத்து விமானிகள் ஹெலிகாப்டரை வயலுக்குள் அவசரமாகத் தரையிறக்கினர். ஆனால், பெரிய அளவில்அதிர்வு கூட இல்லாமல் மிகவும் கட்டுப்பாட்டுடன் ஹெலிகாப்டரை விமானிகள் இறக்கினர். இதனால் யாருக்கும்காயம் ஏற்படவில்லை.
இதன் பிறகு வேறொரு ஹெலிகாப்டரில் நிருபர்கள் சோம்நாத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அங்கு நடந்த நிகழ்ச்சியில் பேசிய அத்ாவனி,
லட்சக்கணக்கான மக்கள் எங்கு கோவில் கட்டப்பட வேண்டும் என்று விரும்புகிறார்களோ அங்கு தான் ராமர்கோவிலைக் கட்ட வேண்டும். சிலர் நீதிமன்றத் தீர்ப்புக்காக காத்திருக்கலாம் என்கிறார்கள். சிலர் கோவில் கட்டசட்டம் கொண்டு வர வேண்டும் என்கிறார்கள்.
என்னைப் பொறுத்த வரை அனைத்து மதத்தினரையும் கொண்டு அங்கு கோவில் கட்ட வேண்டும். அது தான்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு. அங்கு ஏன் கோவில் கட்டக் கூடாது என்று கேட்டார் அத்வானி.












Click it and Unblock the Notifications