பாய்ஸ் படத்தைத் தடை செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு
சென்னை:
சர்ச்சைக்குரிய பாய்ஸ் படத்தை தடை செய்ய வேண்டும் என்று கோரி சென்னையைச் சேர்ந்த பேராசிரியை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
சென்னை திருவான்மியூர், பத்திரிக்கையாளர் குடியிருப்பைச் சேர்ந்த பேராசியை சரஸ்வதி.
இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ள ரிட் மனுவில், பெண்களின் உணர்வுகளைபுண்படுத்தும் விதமாக பாய்ஸ் படம் அமைந்துள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களை தூண்டுவிக்கும்வகையில் பெரும்பாலான காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஈவ் டீசிங்கும், பெண்களை கேவலப்படுத்தும் செயல்களும், சமூகத்தின் சாதாரண நிகழ்வுகளாக படத்தில்சித்தரித்துள்ளனர். பெண்களுக்கு எதிரான, அருவருப்பான வசனங்களும் ஏராளமாக உள்ளன.
எனவே, இந்தப் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் பிறர் மீது, தமிழ்நாடு பெண்கள் கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்பிரிவு 2(ஏ)-வின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும்.
ஆபாசம், அருவருப்பும் நிறைந்த இந்தப் படத்திற்குக் கொடுக்கப்பட்ட தணிக்கைச் சான்றிதழை உடனடியாக ரத்துசெய்து, படத்திற்கும் தடை விதிக்க வேண்டும் என்று கோரியுள்ளார் பேராசிரியை.
மனுவை பரிசீலித்த தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி மற்றும் நீதிபதி குலசேகரன் ஆகியோர் அடங்கிய டிவிஷன்பெஞ்ச் இதை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.
தயாரிப்பாளர், மத்திய, தமிழக மற்றும் ஆந்திர மாநில தணிக்கை வாரிய அதிகாகளுக்கு நோட்டீஸ் அனுப்பநீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஜென்டில்மேனை சென்ஸார் செய்த நீதிபதி:
இப்போது சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக உள்ள சுபாஷன் ரெட்டி ஆந்திர உயர் நீதிமன்றநீதிபதியாக இருந்தபோது, இதே ஷங்கர் இயக்கிய ஜென்டில் மேன் படத்தில் சில சர்ச்சைக்குரிய காட்சிகளைநீக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
பெரிய பிரச்சனை.. முதல்வர் அலுவலகத்துக்கே வரும் ’ஜான்’.! விஜய் டேபிளுக்கே போகாத உளவுத்துறை தகவல்! -
மோடி தலைமையில் நிதி ஆயோக் குழு கூட்டம் தொடங்கியது.. முதல்வர் விஜய் பங்கேற்றார்! அஜெண்டா என்ன? -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
டெல்லியில் விஜய்.. நாளை பிரதமர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கிறார்.. என்ன மேட்டர்? -
ஜான் ஆரோக்கியசாமியின் டெல்லி லாபி.. திமுகவுக்கு தூதுவிட்ட சுனில்.. சபரீசனுக்கு வந்துச்சே கோபம் -
விஜய் அரசை தாண்டி.. பரந்தூர் விமான நிலையத்துக்கு புதிய சிக்கல்.. ஆந்திரா மூலம் வந்த புது பிரச்சனை! -
தெற்கில் வேகமெடுக்கும் தவெக வியூகம்.. நாதக நிர்வாகிகளை இழுக்க முதல்வர் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்! -
திடீரென போனை போட்டு பேசிய விஜய்.. பொருளாதார ஜாம்பவான்களுடன் ரகசிய ஆலோசனை.. என்ன காரணம்? -
கே.என்.நேரு மீது FIR.. உள்ளே இழுக்கப்பட்ட உதயநிதி நண்பர் ரத்தீஷ்! விஜய் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்












Click it and Unblock the Notifications