கட்டி உருண்ட காங்கிரஸார்: கடலூர் கோஷ்டி மோதல்
கடலூர் :
காங்கிரஸ் உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகளும், தொண்டர்களும் கட்டி உருண்டுசண்டை போட்டனர்
கடலூர் மாவட்ட காங்கிரஸ் உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சியில் இளங்கோவன் மற்றும் வாசன்ஆதரவாளர்களுக்கிடையே பெரும் மோதல் ஏற்பட்டது. இதில் காங்கிரஸ் நிர்வாகிகளும், தொண்டர்களும் கட்டிஉருண்டு சண்டை போட்டனர். சிலரின் சட்டைகள் கிழிந்தன, இருக்கைகள் பறந்தன.
தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சிக்கு உறுப்பினர்களை சேர்க்கும் பணி நடந்து வருகிறது. ஆனால்இளங்கோவன், சோ.பாலகிருஷ்ணன் கையெழுத்துப் போட்ட உறுப்பினர் அட்டையை வாங்க மாட்டோம் என்றுவாசன் தரப்பு மாவட்ட தலைவர்கள் கூறி விட்டனர்.
இதையடுத்து அதிரடி நடவடிக்கையாக, தமிழக காங்கிரஸ் அனைத்து மாவட்ட காங்கிரஸ் கட்சிக்கும்பார்வையாளர்களை நியமித்தது. இவர்கள் அந்தந்த மாவட்டங்களுக்குச் சென்று உறுப்பினர் அட்டைகளைவிநியோகித்து வருகிறார்கள்.
கடலூர் மாவட்டத்திற்கு கண்ணன் என்பவர் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதன்கிழமை உறுப்பினர்அட்டைகளை விநியோகிப்பதற்காக கட்சி அலுவலகத்திற்கு கண்ணன், மாவட்ட துணைத் தலைவர் ஜெயராமன்உள்ளிட்டவர்களும் வந்திருந்தனர்.
அப்போது அங்கு வந்த வாசன் ஆதரவாளரான மாவட்ட தலைவர் நெடுஞ்செழியன் மற்றும் அவரதுஆதரவாளர்கள், கண்ணன், ஜெயராமன் ஆகியோடம் தகராறு செய்தனர். உறுப்பினர் அட்டைகளை விநியோகிக்கக்கூடாது என்று வாக்குவாதம் செய்தனர்.
இந்த வாக்குவாதம் வழக்கம் போல மோதலாக மாறியது. இரு தரப்பினரும் கட்டிப்புரண்டு சண்டை போட்டனர்.இதில் ஜெயராமனின் சட்டை கிழிந்தது. கட்சியின் பிற நிர்வாகிகள் தலையிட்டு மோதியவர்களை கட்டுக்குள்கொண்டு வந்தனர்.
மோதல் நடந்த காங்கிரஸ் அலுவலகம் போர்க்களம் போல காணப்பட்டது. வயதில் மூத்தவனாக இருந்தும்,காங்கிரஸ் கட்சியில் நீண்ட காலமாக இருந்து வரும் தன்னை அடியாட்கள் வைத்து தாக்கி விட்டதாக ஜெயராமன்மிகவும் வேதனையுடன் தெரிவித்தார்.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications