பொடா நீதிமன்றத்தில் நெடுமாறன்-வைகோ சந்திப்பு
சென்னை:
பூந்தமல்லி பொடா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வரப்பட்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும்தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் ஆகிய இருவரும் நீதிமன்ற வளாகத்தில் சந்தித்துக் கொண்டனர்.பின்னர் சிறிது நேரம் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.
புலிகளை ஆதரித்ததாகக் கூறி இருவரும் பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் காவல்நீட்டிப்புக்காக இருவருமே தனித்தனியே பூந்தமல்லி நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட்னர்.
விசாரணைக்குப் பின் நீதிமன்ற வளாகத்தில் தன்னைப் பார்க்க வந்திருந்த மகன் துரை வையாபுரி மற்றும் பேரன்பிரபாகரனுடன் வைகோ பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது பழ. நெடுமாறன் உள்ளிட்டவர்கள் நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்டனர். அப்போதுவைகோவைப் பார்த்த நெடுமாறன், அவரிடம் செல்ல முயன்றார். இதை போலீஸார் தடுத்தனர்.
இதைப் பார்த்து ஆவேசமடைந்த வைகோ, போலீசாரிடம் சென்று கோபத்துடன் பேசினார். போலீசார் ஏதோ பதில்கூறவே கோபத்தில் உச்சத்திற்கு சென்ற வைகோ கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அவருடன் பேசபழ. நெடுமாறனை போலீஸார் அனுமதித்தனர்.
இருவரும் சில நிமிடங்கள் பேசிக் கொண்டனர். ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக் கொண்டனர்.
பின்னர் நெடுமாறன் நீதிமன்றத்திற்குள் சென்றார். வைகோ மீண்டும் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
எதுவுமே தெரியாது.. நினைவில்லை:
முன்னதாக வைகோவின் சிறைக் காவலை செப்டம்பர் 29ம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
வைகோ உள்ளிட்ட 9 பேர் மீதான வழக்கில் இப்போது குறுக்கு விசாரணை நடந்து வருகிறது. சப்- இன்ஸ்பெக்டர்சென்னகேசவனிடம், வைகோ தரப்பு வக்கீல் தினகரன் விசாரணை நடத்தினார்.
அப்போது வக்கீல் தினகரன் கேட்ட கேள்விகள் அனைத்திற்குமே தெரியாது என்ற பதிலையே கொடுத்தார் சப்-இன்ஸ்பெக்டர் சென்னகேசவன்.
1983ம் ஆண்டு தமிழகத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சிகள் நடத்திய போராட்டங்கள்,இலங்கைத் தமிழர்களுக்காக எம்.ஜி.ஆர். உண்ணாவிரதம் இருந்தது, பின்னர் ஜெயலலிதா உண்ணாவிரதம்இருந்தது ஆகியவை குறித்து வைகோவின் வழக்கறிஞர் கேள்விகளை அடுக்க, தனக்கு எதுவுமே தெரியாதுஎன்றே சென்னகேசவன் பதில் சொன்னார்.
அதேபோல, மதுரையில் தமிழ் ஈழ மக்களுக்காக திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட டெசோ மாநாடு, அதில்வாஜ்பாய், என்.டி.ராமாராவ், கருணாநிதி ஆகியோர் கலந்து கொண்டது குறித்தும் தனக்கு நினைவே இல்லைஎன்றார் சென்ன கேசவன்.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications