வாஜ்பாய்- புஷ் சந்திப்பு: பாக். மீது இந்தியா புகார்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்:

Vajpayee&George Bushஅமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை பிரதமர் வாஜ்பாய் நேற்று நியூயார்க்கில் சந்தித்துப் பேசினார்.

ஐ.நா. பொதுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக உலகத் தலைவர்கள் அமெரிக்காவில் குவிந்துள்ளனர்.அவர்களில் சிலரை புஷ் சந்தித்து வருகிறார். நேற்றிரவு வாஜ்பாயை அவர் சந்தித்தார்.

அப்போது ஈராக், தீவிரவாதம், பாகிஸ்தான், காஷ்மீர், அல்-கொய்தா உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இருவரும்பேசினர். பேச்சின்போது, காஷ்மீரில் பாகிஸ்தானால் தூண்டிவிடப்படும் தீவிரவாதம் குறையவே இல்லை எனவாஜ்பாய் புஷ்ஷிடம் சுட்டிக் காட்டினார்.

அப்போது ஈராக்கில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட இந்தியப் படைகளை அனுப்ப வேண்டும் என புஷ்வலியுறுத்தினார்

ஆனால், எங்கள் நாட்டில் தீவிரவாத்தை எதிர்கொள்ளவும், தாக்குதலைத் தடுக்கவும், உள்நாட்டுப் பாதுகாப்பைஅதிகரிக்கவுமே எங்கள் படைகளுக்கு நேரம் சரியாக இருக்கிறது என்று வாஜ்பாய் கூறிவிட்டதாகத் தெரிகிறது.இதனால் ஈராக்குக்கு படைகளை அனுப்ப வேண்டும் என்ற புஷ்ஷின் கோரிக்கையை இந்தியா நிராகரித்துள்ளது.

இந்தியா- சீனா இடையிலான உறவு குறித்தும் புஷ்சும் வாஜ்பாயும் விவாதித்ததாகத் தெரிகிறது.

அப்போது இந்தியா வருமாறு புஷ்ஷை வாஜ்பாய் மீண்டும் அழைத்தார். இதற்கு பதிலளித்த புஷ், நானும் வரஆவலாகவே உள்ளேன். ஆனால், ஜனாதிபதியாக வரப் போகிறேனா அல்லது தனிப்பட்ட முறையில் வரப்போகிறேனா என்று தெரியவில்லை. ஜனாதிபதியாகவே வரவே ஆசைப்படுகிறேன் என்று பதில் தந்தார்.

அடுத்த ஆண்டு நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்தலை மனதில் வைத்தே புஷ் இவ்வாறு ஜோக்கடித்தார்.

காஷ்மீரை கிளப்பிய முஷாரப்:

முன்னதாக ஐ.நா. பொதுக் குழுவில் பேசிய பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப், காஷ்மீர் விவகாரத்தைக்கிளப்பினார்.

காஷ்மீரில் நடப்பது தீவிரவாதம் அல்ல. அது ஒரு உள் நாட்டு சுதந்திரப் போராட்டம். காஷ்மீரிகளால்நடத்தப்பட்டு வரும் போராட்டம். அதற்கு பாகிஸ்தான் தார்மீக ஆதரவைத் தருகிறது. ஆனால், வேறு வழிகளில்உதவவில்லை. எங்கள் நாட்டிலிருந்து காஷ்மீருக்குள் தீவிரவாதிகள் போகவில்லை என்றார்.

மேலும் ஆயுதங்கள், ஏவுகணைகள், நீர் மூழ்கிகள், போர் விமானங்கள், விமானம் தாங்கிக் கப்பல்கள், ஏவுகணைஎதிர்ப்பு ஆயுதங்கள் என இந்தியா ஆயுத குவிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும், ரசாயன, உயிரியல், அணுஆயுதங்களை உருவாக்கி வருவதாகவும் முஷாரப் குற்றம் சாட்டினார்.

பின்னர் நிருபர்களிடம் பேசிய பாகிஸ்தான் முஷாரப், பாகிஸ்தானின் அமைதி முயற்சிகளுக்கு இந்தியாவிடம்இருந்து உரிய பதில் கிடைக்கவில்லை. ஆயுதங்களை இந்தியா குவித்து வரும் நிலையில் பாகிஸ்தானுக்கு எப்-16ரக போர் விமானங்களை வழங்க வேண்டும் என்று நேற்று அதிபர் புஷ்ஷை சந்தித்தபோது கோரிக்கை வைத்தேன்என்றார்.

என்னை சந்திகக பிரதமர் வாஜ்பாய் தயாராக இல்லை உணர்கிறேன். இதனால் அவரை சந்திக்க நானும்விரும்பவில்லை என்றார்.

முன்னதாக ஐ.நாவில் வாஜ்பாயை சந்திக்க முஷாரப் விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால், அதை வாஜ்பாய் ஏற்கமறுத்துவிட்டார்.

இன்று வாஜ்பாய் உரை:

முஷாரபின் இந்தப் பேச்சுக்கு இன்று பிரதமர் வாஜ்பாய் ஐ.நா. பொதுக் குழுவில் பதில் தருவார். இன்று அவர்ஐ.நாவில் உரையாற்றவுள்ளார்.

முன்னதாக வாஜ்பாயை சந்தித்த ஜார்ஜ் புஷ், அவரை அமைதித் தூதுவர் என வர்ணித்தார். பாகிஸ்தனுடனானபோரைத் தவிர்த்தது, பேச்சு வார்த்தைகளுக்கு முன் வந்தது, அந் நாட்டுடன் உறவை வலுப்படுத்த அடுத்தடுத்துநடவடிக்கை எடுத்தது என வாஜ்பாய் எடுத்த அமைதி முயற்சிகளை புஷ் பாராட்டினார்.

கடந்த இரு நாட்களில் பல நாட்டுத் தலைவர்களை புஷ் சந்தித்தாலும், வாஜ்பாய்க்கு மட்டுமே மதிய விருந்தும்அளித்தும் புஷ் கெளரவித்தார்.

ரணிலுடன் சந்திப்பு:

புஷ்சுடன் சந்திப்பை முடித்துக் கொண்ட வாஜ்பாய் பின்னர் இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயையும்சந்தித்துப் பேசினார். அப்போது இலங்கை அமைதி பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்டுள்ள தடைகள், தமிழர்பகுதிகளில் இடைக்கால நிர்வாகம் அமைப்பது குறித்து இலங்கை எடுத்துள்ள முடிவுகளை வாஜ்பாயிடம் ரணில்விளக்கினார்.

மேலும் அடுத்த மாதம் ரணில் இந்தியா வரும்போது இந்த விஷயங்கள் குறித்து விரிவாகப் பேசவும் முடிவுசெய்யப்பட்டது.

இந்தியா-சீனா- ரஷ்யா:

இதற்கிடையே இந்திய, ரஷ்ய, சீன வெளியுறவுத்துறை அமைச்சர்களும் தனியே சந்தித்துப் பேசினர். அப்போதுஈராக் விவகாரத்தில் மூன்று நாடுகளுமே இணைந்து செயல்படுவது, பொதுவான முடிவை எடுப்பது என்று முடிவுசெய்யப்பட்டுள்ளது.

கொலம்பியா பல்கலையில் வாஜ்பாய்:

இந் நிலையில் இன்று கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பிரதமர் வாஜ்பாய் உரை நிகழ்த்தினார். இந்தியாவின்பொருளாதார சீர்திருத்தங்கள் குறித்து அவரது உரை அமைந்திருந்தது. அடுத்த 5 ஆணடுகளில் நிலாவுக்கு இந்தியவிண்கலம் செல்லும் என்றார்.

பாகிஸ்தான் செல்கிறார் வாஜ்பாய்:

இதற்கிடையே சார்க் மாநாட்டில் பங்கேற்க அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வாஜ்பாய் பாகிஸ்தான் செல்வார் எனநியூயார்க்கில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா நிருபர்களிடம் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+