மகன் இறந்ததால் உணவின்றி வாடிய முதிய தம்பதிக்கு ஜெ. உதவி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் நகரைச் சேர்ந்த முதிய தம்பதிக்கு அவர்களது வயோதிகம் மற்றும்வறுமையைக் கணக்கில் கொண்டு ரூ. 50,000 நிதியுதவி அளித்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா.

ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்தவர் தாளமுத்து. இவரது ஒரே மகன் ஜெயமுருகன். சமீபத்தில் வேன் மோதியதில்ஜெயமுருகன் இறந்து விட்டார். இதனால் கவனிக்க ஆள் இல்லாத நிலைக்கு தாளமுத்துவும் அவரது மனைவியும்தள்ளப்பட்டனர்.

சம்பாத்து வந்த மகன் இறந்து போனதாலும், மிகவும் வயதான காரணத்தால் வேலை ஏதும் பார்க்க முடியாதநிலையில் இருந்ததாலும் இந்த முதிய தம்பதி வறுமையில் வாடினர். நடக்கக் கூட வழியில்லாத இந்தத் தம்பதிஉணவுக்கு கூட வழியில்லாமல் துவண்டனர்.

இதையடுத்து தனது நிலையை விளக்கி முதல்வர் ஜெயலலிதாவுக்கு தாளமுத்து கடிதம் எழுதினார். ஏதாவது உதவிசெய்யும்படி கோரிக்கை விடுத்தார்.

இந்தத் தம்பதியின் நிலையை அறிந்த ஜெயலலிதா, வயோதிகம் மற்றும் வறுமை நிலையை மனதில் கொண்டுமுதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக ரூ. 50,000 நிதியுதவி அளிக்க உத்தரவிட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+