பெங்களூர் இஸ்கான் கோவிலில் போலீசார் அதிரடி சோதனை
பெங்களூர்:
பெங்களூர் ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா இயக்கத்துக்குச் சொந்தமான மிகப் பெரிய கோவிலில் கொல்கத்தா நகரபோலீஸார் அதிரடி சோதனை நடத்தினர்.
கொல்கத்தா இஸ்கான் கோவிலில் பல கோடி மோசடி செய்த வழக்கில் அந்தக் கோவிலின் முன்னாள் தலைவர்உட்பட 4 பேரை தேடி இந்த போலீசார் பெங்களூர் வந்து இந்தச் சோதனைகளை நடத்தினர்.
உலகப் பிரசித்தி பெற்ற இஸ்கான் அமைப்புக்கு பல நாடுகளில் கோவில்கள் உள்ளன. கோடிக்கணக்கில்சொத்துக்கள் உள்ளன. கொல்கத்தாவில் உள்ள இஸ்கான் கோவிலில் தலைவராக இருந்த மகாஜன் தாஸ் மற்றும்அறங்காவலர்கள் உத்தம தாஸ், ஆத்ருதரன் தாஸ் உள்ளிட்ட 4 பேரும் கோடிக்கணக்கான கோவில் பணத்தைகையாடல் செய்துவிட்டதாக புகார் உள்ளது.
இந் நிலையில் இந்த நால்வரும் தலைமறைவாகிவிட்டனர். இவர்களை கொல்கத்தா போலீஸார் வலைவீசி தேடிவருகின்றனர். இந் நிலையில் இந்த நான்கு பேரும் பெங்களூரில் தங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல்கிடைத்தது.
இதையடுத்து எஸ்.பி. தலைமையிலான கொல்கத்தா போலீசார் 2 நாட்களுக்கு முன் பெங்களூர் வந்தனர்.தலைமறைவான நான்கு பேரும் இஸ்கான் கோவிலில் தான் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததால், போலீஸார்நேற்று காலை 10 மணிக்கு பெங்களூர் வெஸ்ட் ஆப் கார்ட் ரோட்டில் உள்ள இஸ்கான் கோவிலுக்கு வந்தனர்.
ஆனால், கோவில் நிர்வாகிகள் போலீசாரை உள்ளே விட மறுத்தனர். இதையடுத்து பெங்களூர் நகர போலீஸார்உதவியுடன் கொல்கத்தா போலீஸார் இஸ்கான் கோவிலுக்குள் சென்று அதிரடிசோதனை நடத்தினர்.
சுமார் அரை மணி நேரம் சோதனை நடந்தது. சிறிய மலை மீது அமைந்துள்ள இந்தக் கோவிலின் அனைத்துப்பகுதிகளிலும் போலீசார் சோதனை நடத்தினர். ஆனால், குற்றவாளிகள் யாரும் சிக்கவில்லை.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications