தலித் பெண்ணை மலம் உண்ண வைத்து கொடுமை!
மதுரை:
மதுரை அருகே கீழ உரப்பனூர் என்ற கிராமத்தில், மேல் ஜாதி இளைஞனின் செக்ஸ் விருப்பத்தை நிறைவேற்றமறுத்த தலித் பெண்ணை மேல் ஜாதிக்காரர்கள் சேர்ந்து, மலத்தை உண்ண வைத்து கொடுமைப்படுத்தியுள்ளனர்.
அப்போது செல்லத் தேவர் என்பவரின் மகன் ராஜு அவரைப் பின் தொடர்ந்து வந்துள்ளார். வயலுக்குள்முத்துமாரியைத் தடுத்து நிறுத்தினார். பின்னர் முத்துமாரியின் கையைப் பிடித்து இழுத்து கற்பழிக்க முயன்றார்.
ஆனால், கையை உதறிய முத்துமாரி தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அங்கிருந்து ஓடினார். அவரை ராஜு விரட்டிக்கொண்டு ஓடி வந்தார். அதற்குள் தனது வீட்டுக்குள் நுழைந்து கதவைப் பூட்டிக் கொண்டார் முத்துமாரி.
இதையடுத்து ராஜூ அங்கிருந்து சென்றுவிட்டான்.
இரவில் வீடு திரும்பிய பிச்சை தனது மனைவி முத்துமாரி அழுது கொண்டிருப்பதைப் பார்த்து என்னவென்றுவிசாரித்தபோது, நடந்ததைக் கூறியுள்ளார் முத்துமாரி. இப்போதே பஞ்சாயத்தைக் கூட்டி நீதி கேட்க வேண்டும்என்றும் கூறியுள்ளார்.
ஆனால் இப்போது இரவாகி விட்டதால் விட்டுவிடலாம், காலையில் போய் ஊர்ப் பெரியவர்களிடம் புகார் கூறிபஞ்சாயத்தைக் கூட்டலாம் என பிச்சை கூறியிருக்கிறார்.
அப்போது ஒரு கும்பல் பிச்சையின் வீட்டுக் கதவை உடைத்தபடி உள்ளே நுழைந்தது. ராஜு, அவரது மனைவி,மற்றும் அவரது உறவினர்களும், அந்தப் பகுதி ரெளடிகளும் அந்தக் கும்பலில் இருந்தனர்.
பிச்சையின் ஜாதியை சொல்லியபடி தாறுமாறாகத் திட்டியுள்ளனர்.
பின்னர் பிச்சையை அடித்து உதைத்தனர். முத்துமாரியின் தலை முடியைப் பிடித்து இழுத்து அடித்துள்ளனர். அவரதுசேலையையும் உருவி, ஜாக்கெட்டை கிழித்து ஏறிந்துள்ளனர். தடுக்க வந்த பிச்சையை அந்தக் கும்பல்பயங்கரமாகத் தாக்கியது.
ராஜுவின் மனைவி விஜயா, தனது கையில் வைத்திருந்த வாளியில் இருந்த மனிதக் கழிவை பிச்சை மற்றும்முத்துமாரியின் மீது ஊற்றியுள்ளார்.
பின்னர் முத்துமாரியைக் கட்டாயப்படுத்தி மனிதக் கழிவை அவரது வாயில் ஊற்றியுள்ளார். மேலும் அவரது இருகுழந்தைகளையும் அந்தக் கும்பல் அடித்துள்ளது.
இதையடுத்து பிச்சை-முத்துமாரி இருவரும் காலில் விழுந்து அந்தக் கும்பலிடம் கெஞ்சியுள்ளனர். அப்போது,ராஜு மீது பஞ்சாயத்தில் புகார் தரக் கூடாது என்று மிரட்டிவிட்டு அந்தக் கும்பல் அங்கிருந்து சென்றுள்ளது.
இந்த சம்பவத்திற்குப் பிறகு உயிருக்குப் பயந்து, பிச்சை மற்றும் முத்துமாரி இருவரும் தங்களது இரண்டுகுழந்தைகளுடன் விரகனூர் கிராமத்திற்கு சென்றனர். அங்குள்ள அவரது உறவினர் பழனியிடம் நடந்ததைக்கூறினர்.
அவர் பிச்சை மற்றும் முத்துமாரியை திருமங்கலம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று புகார் கொடுத்தார்.இதைத் தொடர்ந்து ராஜு மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
தனக்கு ஏற்பட்ட நிலைமை குறித்து முத்துமாரி மிகுந்த அதிர்ச்சியுடன் உள்ளார். அந்த சம்பவத்திற்குப் பின்னர்என்னால் எதுவுமே சாப்பிடக் கூட முடியவில்லை. சாக வேண்டும் போல உள்ளது. ஆனால் எனது இரண்டுகுழந்தைகளுக்காகத்தான் அந்த முடிவுக்கு நான் இன்னும் போகவில்லை என்று கதறுகிறார் முத்துமாரி.
முத்துமாரிக்கு நியாயம் கிடைக்கச் செய்யும் முயற்சியில் மதுரையைச் சேர்ந்த பீப்பிள்ஸ் வாட்ச் என்ற சமூக நலஅமைப்பு இறங்கியுள்ளது.
மாவட்ட கலெக்டர், காவல்துறைக் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு புகார் அனுப்பியுள்ளதோடு, கீழ உரப்பனூர்கிராமத்திற்கும் தனது குழுவை அனுப்பி விசாரணை நடத்தியுள்ளது.
போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் மனித உரிமை ஆணையத்தை அணுகவும், சட்டரீதியிலானநடவடிக்கையில் இறங்கவும் அந்த அமைப்பு திட்டமிட்டுள்ளது.
-
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
நாளை மறுநாள் திருச்சி செல்லும் விஜய்.. முதல்வரான பிறகு பொதுவெளியில் முதல் நிகழ்ச்சி! பிளான் என்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
மகளிர் உரிமைத் தொகை ரூ 2500 எப்போது? பட்டென அப்டேட் கொடுத்த மரியவில்சன்! 2 வாரங்கள் கழித்தா? -
அஜித் தாயார் மறைவு! அரணாக இருந்து அரவணைத்த தாயை இழந்த நண்பருக்கு இரங்கல்! முதல்வர் விஜய் பதிவு












Click it and Unblock the Notifications