பொடா: திமுகவின் சிறை நிரப்பும் போராட்டத்துக்கு பா.ம.க, காங்கிரஸ் ஆதரவு

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம் & சென்னை:

பொடாவுக்கு எதிராக டிசம்பர் 1ம் தேதி திமுக நடத்தும் சிறை நிரப்பும் போராட்டத்துக்கு பா.ம.கவும் ஆதரவுஅளிக்கும் என அக் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். அதே போல இந்தப் போராட்டத்துக்குகாங்கிரசும் ஆதரவளிக்கும் என அக் கட்சியில் செயல் தலைவர் இளங்கோவனும் அறிவித்துள்ளார்.

விழுப்புரம் அருகே தைலாபுரம் தோட்ட வீட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த ராமதாஸ் கூறுகையில்,

பொடா சட்டம் குறித்து ஆராய நியமிக்கப்பட்டுள்ள மறு ஆய்வுக் குழு தனது அறிக்கையை தரும் வரைகாத்திருந்தால் நிலைமை எல்லை மீறிப் போய் விடும். எனவே உடனடியாக பொடா சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவது அவசியம்.

எல்லை தாண்டிய பயங்கரவாதம், தீவிரவாதிகளை ஒடுக்குவது போன்றவற்றிற்காகத்தான் பொடா சட்டத்தைப்பயன்படுத்த வேண்டும். அதை விடுத்து அரசியல்வாதிகளைப் பழிவாங்க இந்த சட்டத்தைப் பயன்படுத்துவதுவன்மையாக கண்டிக்கத்தக்கது.

மத்திய அமைச்சர் கண்ணப்பனை பொடா சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டிய நிலை இப்போது இல்லை.அவரைப் பழிவாங்க இந்த சட்டத்தை மாநில அரசு தவறாகப் பயன்படுத்துவதை மத்திய அரசு அனுமதிக்கக்கூடாது.

காவிரிப் பிரச்சினை தொடர்பாக விரைவில் அதிமுக நீங்கலான கட்சிகளின் எம்.பிக்கள் அடங்கிய குழு டெல்லிசென்று பிரதமரைச் சந்தித்து கோரிக்கை விடுக்கும். காவிரி ஆணையக் கூட்டம் உடனடியாக கூட்டப்படவேண்டும். கர்நாடக அரசுக்கு சாதகமான நிலையை மத்திய அரசு எடுக்கக் கூடாது.

டிசம்பர் 1ம் தேதியன்று திமுக நடத்தும் சிறை நிரப்பும் போராட்டத்திற்கு பாமக ஆதரவு அளிக்கிறது என்றார் அவர்.

காங்கிரசும் ஆதரவு:

மத்திய அரசின் பொடா, மாநில அரசின் பொடா துஷ்பிரயோகம் ஆகியவற்றைக் கண்டித்து டிசம்பர் 1ம் தேதிதமிழகத்தில் திமுக நடத்தும் சிறை நிரப்பும் போராட்டத்திற்கு தமிழக காங்கிரஸ் கட்சி தார்மீக ஆதரவு அளிக்கும்என இளங்கோவன் தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், திமுகவின் போராட்டம் நியாயமானதாகத் ரிெதவதால்,தமிழக காங்கிரஸ் கட்சி தார்மீக ஆதரவு அளிக்கிறது. பொடா சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்பதில் திமுகதலைவர் கருணாநிதி உறுதியாக இருப்பதை நான் வரவேற்கிறேன்.

தமிழகத்தில் மணலை எடுத்து விற்பனை செய்ய அரசு முடிவு செய்திருப்பது வரவேற்புக்குயது. அதேசமயம், கடந்தமாதம், கரூர் அருகே 6000 லோடு மணல் திருட்டுத்தனமாக கேரளாவுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதற்குக்காரணமானவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுத்தால் நலமாக இருக்கும் (இதில் ஆளும் கட்சியினர் பெயர்அடிபடுகிறது) என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+