சிங்கப்பூர்: தூக்கில் போடப்பட்டார் நாகப்பட்டிணம் வாலிபர் அருண்
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் கொலைக் குற்றம் சாட்டப்பட்ட தமிழக இளைஞர் அருண் பிரகாஷ் இன்று தூக்கில் போடப்பட்டார்.
சிங்கப்பூர் நேரப்படி இந்திய நேரப்படி காலை 6 மணிக்கு சாங்கி சிறைச்சாலையில் இந்த தூக்கு தண்டனைநிறைவேற்றப்பட்டது.
நாகப்பட்டிணத்தைச் சேர்ந்த வைத்தியலிங்கம் என்பரின் மகன் அருண் பிரகாஷ் (வயது 25). சிங்கப்பூரில் வேலைபார்த்து வந்தார். இவருடன் பிளாட்டில் தமிழகத்தைச் சேர்ந்த லூர்துசாமி லெனின் செல்வநாயகம் என்பவரும்தங்கியிருந்தார்.
கடந்த 2001ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி, கிருஸ்துமஸ் விடுமுறையில் இருந்த இவர்கள் நன்றாகக் குடித்தனர்.போதையில் மிகுதியில் அருண் பிரகாசுக்கும் லெனினுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் போதை உச்சிக்கு ஏற ஆத்திரமடைந்த அருண் பிரகாஷ் கத்தியால் லெனினைக் குத்தினார்.
படுகாயமடைந்த லெனன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி மறுநாள்லெனின் இறந்தார்.
இதையடுத்து 2002ம் ஆண்டு மார்ச் 18ம் தேதி ஒரு செக் போஸ்டில் வைத்து அருண் பிரகாஷை போலீசார் கைதுசெய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த டிசம்பரில் அருண் பிரகாஷை கொலைக் குற்றவாளி எனஅறிவித்து தூக்கு தண்டனை விதித்தது.
இதை எதிர்த்து பிரகாஷ் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு இந்த ஆண்டு பிப்ரவரியில் தள்ளுபடிசெய்யப்பட்டது. இதனால் தூக்கு தண்டனை உறுதியானது.
இதையடுத்து மரண தண்டனையை ரத்து செய்யக் கோரியும், அதை ஆயுள் தண்டனையாக மாற்றக் கோரியும்ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு உலகளாவிய பிரசாரத்தை தொடங்கியது.
சிங்கப்பூர் அதிபர் எஸ்.ஆர்.நாதனுக்கும், அருணின் பெற்றோர் கருணை மனு அனுப்பினர்.
இந்திய, சிங்கப்பூர் தமிழ் அமைப்புகளும் அதிபர் எஸ்.ஆர். நாதனுக்கு இதே போன்ற கருணை மனுஅனுப்பியிருந்தன. ஆனால், இந்தக் கருணை மனுக்களை நாதன் நிராகத்தார்.
இதையடுத்து அருணுக்கு இன்று (அக்டோபர் 3) மரண தண்டனை நிறைவேற்றப்படும் என சிங்கப்பூர் சிறைநிர்வாகம் அறிவித்தது. இதைத் தொடர்ந்து இன்று காலை அவர் தூக்கில் இடப்பட்டு கொல்லப்பட்டதாகசிறைத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
அருணின் தந்தை ஒய்வு பெற்ற ராணுவ வீரர் ஆவார். இப்போது நாகப்பட்டிணம் சுங்கத் துறையில் பணியாற்றிவருகிறார். அவரது தாயார் மின்சார வாரியத்தில் வேலை பார்க்கிறார். அருணுக்கு திருமணமாகாத இருசகோதரிகள் உள்ளனர்.
சிங்கப்பூரில் இந்த ஆண்டில் மட்டும் அருணையும் சேர்த்து 13 பேர் தூக்கில் போடப்பட்டுள்ளனர்.
-
ஏனுங்க, கொஞ்சம் கேளுங்க.. கோயம்புத்தூர்-க்கு விஜய் விசிட்.. கூடவே ஒரு சர்ப்ரைஸ்..சொன்னது யார் தெரியுமா? -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
விஜயபாஸ்கரின் முயற்சிக்கு முட்டுக்கட்டை.. தவெகவில் கிளம்பிய புகைச்சல்.. ஆட்டத்தை மாற்றிய டெல்லி -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
முதல்வர் விஜய்.. பதவியேற்ற 20 நாட்களில் 6 பெரிய சறுக்கல்கள்.. சொதப்பல் மேல் சொதப்பல்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம்












Click it and Unblock the Notifications