திமுகவை ஆதரிப்பதா?: இளங்கோவன் மீது காங். எம்பி பாய்ச்சல்
சென்னை:
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஜெயின் கமிஷனால் குற்றம் சாட்டப்பட்ட திமுக நடத்தும் போராட்டங்களில் கலந்துகொள்ள ஆதரவு தருவோம் என்று கூறும் காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன் உண்மையான காங்கிரஸ்தொண்டரே அல்ல என்று அக் கட்சியின் சிவகங்கை தொகு எம்.பியும், தீவிர அதிமுக விசுவாசியுமான சுதர்சனநாச்சியப்பன் குற்றம் சாட்டியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய நாச்சியப்பன், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவிப்போர் மீது பொடா சட்டம்பாய்வதில் தவறே இல்லை.
விடுதலைப் புலிகளுக்கு தொடர்ந்து ஆதரவு தருவேன் என்று மத்திய அமைச்சர் கண்ணப்பன் கூறுவது கடுமையாககண்டிக்கத்தக்கதாகும். அவர் மீது பொடா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயல்படுவோர் யாராக இருந்தாலம் அவர்களை கண்டிக்க வேண்டும். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலைப் புலிகளுடன் திமுகவுக்கு உள்ள தொடர்பை சுட்டிக் காட்டியது ஜெயின்கமிஷன்.
இவ்வாறு ராஜிவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்டதிமுக நடத்தும் போராட்டங்களுக்கு தார்மீக ஆதரவு தருவதாகயாராவது சொன்னால் அவர் உண்மையான காங்கிரஸ்காரராக இருக்க முடியாது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications