ஓ.பிக்கு புதிய பதவி: அதிமுக மகளிரணித் தலைவரானார் கோகுல இந்திரா
சென்னை:
அதிமுகவின் தேர்தல் பிரிவுச் செயலாளராக பொதுப் பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்நியமிக்கப்பட்டுள்ளார்.
கட்சியின் தலைமை நிலையச் செயலாளராக சட்ட அமைச்சர் ஜெயக்குமார் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.சமீபத்தில் தான் இந்தப் பதவியில் இருந்து வந்த செங்கோட்டையன் மாற்றப்பட்டு ஜெயக்குமார் நியமிக்கப்பட்டார்.
கட்சியின் புதிய பொதுச் செயலாளராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா, புதிய அவைத்தலைவராக நிதியமைச்சர் பொன்னையனையும் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசனையும் மீண்டும் நியமித்தார்.
தற்போது மற்ற பொறுப்புகளுக்குரியவர்களை அறிவித்துள்ளார். ஓ.பன்னீர் செல்வம் கட்சியின் தேர்தல் பிரிவுசெயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தினகரனுக்கு மீண்டும் பதவி:
மறைந்த நெடுஞ்செழியனின் மனைவி விசாலாட்சி, சுலோச்சனா சம்பத், துணை சபாநாயகர் அருணாசலம்,முன்னாள் அமைச்சர்கள் தம்பிதுரை, விஜயலட்சுமி பழனிச்சாமி, சரோஜா, ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர்கருப்பசாமி, லியாகத் அலி கான், ராஜேந்திரன், நலத்துறை அமைச்சர் தளவாய் சுந்தரம், சசிகலாவின் அக்காள்மகனும் எம்பியுமான தினகரன் ஆகியோர் அமைப்புச் செயலாளர்களாக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மலைச்சாமி பதவி பறிப்பு:
ஆனால், இதுவரை அமைப்புச் செயலாளர்களாக இருந்த முன்னாள் தேர்தல் ஆணையரும் எம்.பியுமானமலைச்சாமி, அமைச்சர்கள் அன்வர் ராஜா, தனபால் ஆகியோரிடம் இருந்து இந்தப் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.
ஓ.எஸ். மணியம் பிரச்சாரச் செயலாளராகவும், துரை கோவிந்தராஜன் விவசாய அணிச் செயலாளராகவும்நியமிக்கப்பட்டுள்ளனர்.
கட்சியின் சட்ட ஆலோசகராக ஜெயலலிதாவின் வழக்கறிஞரும், அதிமுக எம்.பியுமான ஜோதிநியமிக்கப்பட்டுள்ளார்.
ஜெ. பேரவை:
எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளராக மாஜி மந்திரி மதுசூதனனும், ஜெயலலிதா பேரவைச் செயலாளராகதொழில்துறை அமைச்சர் நயினார் நாகேந்திரனும் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக மகளிர் அணித் தலைவியாக ராஜ்யசபா எம்.பியான கோகுல இந்திரா நியமிக்கப்பட்டுள்ளார்.
-->











Click it and Unblock the Notifications