ரயில் கூரையில் பயணம் செய்த 2 ராஜஸ்தான் மாணவர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
கடலூர்:
ராஜஸ்தானிலிருந்து சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கு வந்த மாணவர்களில் இருவர் ரயில் கூரைமீது அமர்ந்து பயணித்தபோது, இரும்புக் கம்பியில் அடிபட்டு பரிதாபமாகப் பலியாயினர்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடந்து வரும் மாணவர் கலை விழாவில் தேசிய அளவில்பல்வேறு பல்கலைக்கழக மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதில் கலந்து கொள்ள ராஜஸ்தான் மாநில பல்கலைக்கழக மாணவர்கள் சிலரும் வந்துள்ளனர். சென்னை வந்தஇவர்கள் அங்கிருந்து ராமேஸ்வரம் எக்ஸ்பிரல் ரயிலில் சிதம்பரம் புறப்பட்டனர்.
இதில், இரண்டு மாணவர்கள் ரயில் கூரை மீது அமர்ந்து பயணித்துள்ளனர்.
கடலூர் அருகே ஆற்றுப் பாலம் மீது ரயில் சென்றபோது, பாலத்தில் இருந்த இரும்புச் சட்டம் மாணவர்கள் மீதுமோதியது. இதில் 2 மாணவர்களும் ரயிலின் கூரையில் இருந்து தூக்கி எறியப்பட்டனர். இருவருமே பரிதாபமாகஉயிரிழந்தனர்.
-->











Click it and Unblock the Notifications