இலவச வேட்டி, சேலை ஊழல்: இந்திர குமாரி விடுதலை !
சென்னை:
இலவச வேட்டி, சேலை ஊழல் வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் இந்திர குமாரி விடுவிக்கப்பட்டுள்ளார்.அதே நேரத்தில் குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில் இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் சரியாகவிசாரிக்கவில்லை என்று நீதிபதி கருத்துத் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்து வந்த சிறப்பு நீதிமன்றம் அவரையும், அவரது உதவியாளர் வெங்கட கிருஷ்ணன்உள்ளிட்ட 5 பேரையும் இன்று விடுதலை செய்தது.
1991ம் ஆண்டில் இருந்து 96ம் ஆண்டு வரை அதிமுக ஆட்சி நடந்தபோது செய்யப்பட்ட ஊழல்களை விசாரிக்கஅடுத்து வந்த திமுக ஆட்சியில் 3 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன. இப்போது இதில் ஒரு நீதிமன்றம்மட்டுமே இயங்கி வருகிறது.
1994-95ம் ஆண்டுகளில் ஏழை, எளியவர்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கியதிலும், 1995-96ம் ஆண்டில்பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச சீருடைகள் வழங்கியதிலும் ரூ. 11.42 கோடி அளவுக்கு ஊழல் நடந்ததாக புகார்எழுந்தது.
வேட்டி, சேலையின் நீளத்தைக் குறைத்தும், மட்டமான துணியாலான வேட்டி, சேலைகளை வாங்கியும் இந்த ஊழல்செய்யப்பட்டதாக வழக்குப் பதிவானது.
இந்த ஊழலில் முக்கிய குற்றவாளியாக அப்போதைய சமூக நலத்துறை அமைச்சர் இந்திர குமாரியும் அவரதுஉதவியாளர் வெங்கட கிருஷ்ணனும் சேர்க்கப்பட்டனர். இருவரும் சேர்ந்து ரூ. 11.42 கோடியை சுருட்டியதாகபுகார் கூறப்பட்டது.
இதையடுத்து ஆட்சிக்கு வந்த திமுக 1997ம் ஆண்டு அக்டோபரில் இந்திர குமாரி, அவரது உதவியாளர் மீதுவழக்குப் பதிவு செய்தது. சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை 1999ம் ஆண்டு பிப்ரவரி 3ம் தேதிதொடங்கியது.
இந்த வழக்கை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜமாணிக்கம் விசாரித்து வந்தார். இதில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.தீர்ப்பை வழங்கிய நீதிபதி, இந்திர குமாரி மற்றும் வெங்கட கிருஷ்ணன் ஆகியோர் மீதான குற்றச்சாட்டை சிபிசிஐடி(அரசுத் தரப்பு) சந்தேகத்துக்கு இடமில்லாத வகையில் நிரூபிக்கவில்லை.
இதனால் இந்த இருவரையும் விடுதலை செய்கிறேன்.
மேலும், ரூ.11.42 கோடி பணத்தை சுருட்ட குற்றம் சாட்டப்பட்டவர்கள் சென்னையிலோ அல்லது வேறு இடத்திலோசதித் திட்டம் தீட்டியதற்கு ஆதாரம் எதுவுமே இல்லை.
அதே நேரத்தில் இந்த வழக்கை விசாரித்த சிபிசிஐடி போலீசார் முறையான விசாரணை நடத்தியிருந்தால்உண்மையான குற்றவாளிகளை அடையாளம் கண்டிருக்க முடியும், அதை போலீசார் செய்யவில்லை என்றார்நீதிபதி.
விடுதலையான பின்னர் நிருபர்களிடம் பேசிய இந்திர குமாரி, புரட்சித் தலைவி (ஜெயலலிதா) தலைமையிலானஅதிமுக ஆட்சியில ஊழலுக்கு இடமே இல்லை என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுவிட்டது என்றார்.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் துணைப் பிரதமர் அத்வானி மீதான குற்றச்சாட்டை மத்திய அரசின் கட்டுப்பாட்டில்உள்ள சிபிஐ சரியான நிரூபிக்காமல் விட்டதால் தான் அந்த வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
இப்போது இந்திர குமாரி மீதான வழக்கிலும், அதிமுக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிபிசிஐடி போலீசார்குற்றச்சாட்டை முறையாக நிரூபிக்காமல் விட்டுவிட்டதாக புகார் எழ வாய்ப்புள்ளது.
மேலும், இந்த வழக்கு விசாரணையை இழுத்தடிக்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளைச் செய்ததுநினைவுகூறத்தக்கது. இந்த வழக்கில் மொத்தம் 112 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications