கண்ணப்பனை பொடாவில் கைது செய்வது தவறு: பா.ஜ.க. சொல்கிறது
சென்னை:
மத்திய அமைச்சர் கண்ணப்பனை பொடா சட்டத்தின் கீழ் கைது செய்ய முயல்வது தேவையற்றது. வைகோவிஷயத்தில் பொடாவை தவறாகப் பயன்படுத்திய தமிழக அரசு மீண்டும் அந்தத் தவறைச் செய்யக் கூடாது என்றுபா.ஜ.க. தலைவர் வெங்கைய்யா நாயுடு கூறினார்.
சென்னையில் இன்று நிருபர்களிடம் பேசிய அவர்,
பொடாவை தமிழக அரசு மீண்டும் தவறாகப் பயன்படுத்த முயல்கிறது. இந்தச் சட்டத்தின் கீழ் கண்ணப்பனைக் கைதுசெய்ய முயல்வதை பா.ஜ.க. எதிர்க்கிறது.
அதே நேரத்தில் மத்திய அரசுக்கு தொல்லை நேரும் வகையில் பேசுவதையும், செயல்படுவதையும் அமைச்சர்கள்தவிர்க்க வேண்டும்.
பொடா மறுபரிசீலனைக் கமிட்டி தரப் போகும் பரிந்துரைகளை அனைத்து மாநில அரசுகளும் ஏற்கும் வகையில்இந்தச் சட்டத்திலேயே திருச்சம் கொண்டு வரலாம். இப்போதைக்கு இந்தக் கமிட்டியின் அதிகாரம் பரிந்துரைஅளவில் தான் உள்ளது.
இதனால், இந்தக் கமிட்டியின் உத்தரவை மாநில அரசுகள் ஏற்க வேண்டிய அவசியம் ஏதும் இல்லை என்ற நிலைஉள்ளது. இதை மாற்ற வேண்டும். அதற்குத் தகுந்த வகையில் இந்தக் கமிட்டியின் பரிந்துரைகளை உள்ளடக்கிபொடா சட்டத்தையே திருத்தலாம்.
முற்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஏழைகளுக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். இதற்காக அரசியல் சட்டத்தைத்திருத்த வேண்டும் என்றார் நாயுடு.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications