சம்பா சாகுபடி: கர்நாடகத்திடம் நீரை பெற ஜெ. முயற்சிக்க வேண்டும்- கருணாநிதி
சென்னை:
தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டகளில் சம்பா நெல் சாகுபடிக்கு தற்போது மேட்டூர் அணையில் உள்ள நீர்போதுமானதல்ல. எனவே, கர்நாடகத்திடமிருந்து தண்ணீரைப் பெற தமிழக அரசு முயற்சி எடுக்க வேண்டும் என்றுதிமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
திமுக பேச்சாளர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை நடந்தது. இதில் கலந்து கொண்ட கருணாநிதிபின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், டிசம்பர் 1ம் தேதி நடக்கவுள்ள மறியல் போராட்டத்திற்கு மக்கள்சக்தியைத் திரட்டும் வகையில்,சொற் பொழிவாளர்கள் பொதுக் கூட்டங்களில் பேச வேண்டும் என்றுஅறிவுறுத்தியுள்ளோம்.
சம்பா நெல் சாகுபடிக்கு தற்போது மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இருப்பினும்,இந்தத் தண்ணீர் போதாது என்று விவசாயிகள் கூறுகிறார்கள். எனவே, கர்நாடகத்திலிருந்து காவிரி நீரைப் பெறதமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவிரி ஆணையத்தை பிரதமர் வாஜ்பாய் உடனே கூட்ட வேண்டடும்.
பொடா சட்டத்தில் திருத்தம் தேவை என்று நாங்கள் கூறவில்லை. அதை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்என்பதே எங்களது நிலையான முடிவு.
10ம் தேதி சென்னை வரும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை திமுகவினர் யாரும் சந்திக்கும் வாய்ப்பு ஏதும்இல்லை என்றார் கருணாநிதி.
நேற்று அவர் அளித்த பேட்டியில், இந்திர குமாரி இலவச வேட்டி சேலை ஊழல் வழக்கில் விடுதலைசெய்யப்பட்டுள்ளது நாடகத்தின் இடைவேளை தான். இந்த விடுதலையை எதிர்த்து தமிழக அரசு அப்பீல் செய்யப்போவதாகக் கூறுவதும் நாடகத்தின் அடுத்த காட்சி ஆரம்பமாவதையே காட்டுகிறது.
சாகும் வரை ஜெயலலிதாவின் தலைமைதான் என்று இந்திரகுமாரி கூறியுள்ளார். அவருக்கு ஜெயலலிதா செய்ததுசாதாரண உதவிகளா? அந்த நன்றியை அவர் எப்படி மறக்க முடியும்?.
அமைச்சர் கண்ணப்பனைப் பற்றியே அமைச்சரவையில் பேசவில்லலை, ஆனால் பத்திரிகைகள் அப்படித் தவறாகவெளியிட்டு விட்டன என்று ஜெயலலிதா கடிந்து கொண்டுள்ளார். ஆனால், நிருபர்களிடம் ஜெயலலிதா என்னசொன்னார் என்பதை ஹிந்து ஆங்கிலப் பத்திரிக்கை டேப் ரெக்கார்டரில் பதிவு செய்து பேட்டியை வரிக்கு வரிவெளியிட்டுள்ளது. இதன்மூலம் ஜெயலலிதாவின் பேச்சு விவரத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது.
ஒரு வேளை நிருபர்கள் அமைச்சர் கண்ணப்பனைப் பற்றி கேட்டதும் ஜெயலலிதாவுக்கு, திருப்பதியும் அதன்அருகேயுள்ள காளஹஸ்தியும் நினைவுக்கு வந்து, வேடன் கண்ணப்பன் பற்றி நான் விவாதிக்கவில்லை என்றுகூறியிருப்பாரோ என்னவோ தெரியவில்லை.
தன்னுடைய நேரம் நினைப்பு எல்லாம் மக்கள் பற்றிதான், கண்ணப்பன் பற்றியல்ல என்று முதல்வர் கூறியிருக்கிறார்.இதையே அவர் பிரதமருக்கு ஒரு கடிதமாக எழுதி, முதலில் கண்ணப்பனைப் பற்றி எழுதிய கடிதத்தை வாபஸ்பெற்றுக் கொள்ள அவர் தயாரா? என்று கேட்டார் கருணாநிதி.

