விஜய் கேரளா போகாததற்கு காரணம் இதுதான்! லீக்கான முக்கிய மேட்டர்! பிசுபிசுக்கும் கூட்டணி!
சென்னை: கேரளாவில் 10 ஆண்டுகளுக்கு பிறகு, சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. இதனை தொடர்ந்து இன்று மாநில முதலமைச்சராக வி.டி.சதீஷன் பதவியேற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழக முதலமைச்சர் விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததும் அவர் பங்கேற்காதது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கான காரணம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
என்னதான் தமிழக சட்டமன்ற தேர்தலில் 35% வாக்குகளை வாங்கி, பெரிய வெற்றி பெற்றிருந்தாலும், ஆட்சியமைக்கும் அளவுக்கு அந்த வெற்றி போதுமானதாக தவெகவுக்கு இருக்கவில்லை. இந்த நேரத்தில்தான் 'கை' கொடுத்து உதவியது காங்கிரஸ்.

கை கொடுத்த காங்கிரஸ்
திமுக கூட்டணியில் இருந்தாலும், அறிவாலயம் சென்று மு.க.ஸ்டாலினை சந்தித்து கூட பேசாமல், 20 ஆண்டுகால கூட்டணி உறவை அப்படியே முறித்துக்கொண்டு தவெக பக்கம் காங்கிரஸ் தாவியது. இதன் பிறகுதான் விஜய் முகத்தில் முதலமைச்சருக்கான கலையே தெரிந்தது. இவ்வளவு நம்பிக்கைக்கு உரிய கட்சியாக காங்கிரஸ் இருந்தாலும் கூட, பக்கத்து மாநிலமான கேரளாவில் காங்கிரஸ் முதல்வர் பதவியேற்பு விழாவுக்கு விஜய் போகாதது பலருக்கும் வியப்பை கொடுத்திருந்தது.
மூன்று காரணங்கள்
இதற்கு மூன்று முக்கிய காரணங்கள் இருக்கின்றன. முதல் காரணம், விஜய் பதவியேற்பு விழாவில் நடந்த கசப்பான சம்பவம்தான். காங்கிரஸ் ஆதரவுடன் விஜய் முதலமைச்சராகிறார் என்பதால் விஜய்யின் பதவியேற்பு விழாவுக்கு ராகுல் தனி பிளைட் பிடித்து சென்னை வந்திருந்தார். ஆனால் சென்னைக்கு வந்த பின்னர்தான் தெரிந்தது, ராகுல் காந்திக்கு விழா மேடையில் இருக்கை ஒதுக்கப்படவில்லை என்று. இதனால் டென்ஷனான ராகுல் காந்தி, கதர் தலைகளை கூப்பிட்டு சத்தம் போட.. அவர்கள் தவெக நிர்வாகிகளுக்கு தெரிவித்து, கடைசியில் விஜய்க்கு பக்கத்தில் சீட் போட ஏற்பாடு செய்தனர்.
காங்கிரஸுக்கு இதுதான் மரியாதை
இந்த பஞ்சாயத்து ஒருவழியாக முடிவுக்கு வந்தாலும், மற்ற கதர் தலைகளுக்கு குறிப்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மேலிட பொறுப்பாளரான கிரிஷ் சோடங்கருக்கு உட்கார கூட சீட் ஒதுக்கப்படாதது கடும் அதிருப்தியை உருவாக்கியிருந்தது. விஜய்க்கு முதலமைச்சர் நம்பிக்கையை கொடுத்த காங்கிரஸுக்கு இவ்வளவுதான் மரியாதையா என்றும் கதர்கள் வெடித்து கிளம்பினர்.
அமைச்சரவையில் இடம்
இரண்டாவது காரணம் காங்கிரஸுக்கான அமைச்சர் பதவியை இன்னும் விஜய் ஒதுக்காததுதான். என்னதான் காங்கிரஸ் வாலன்ட்டரியாக வந்து ஆதரவு கொடுத்தாலும், இப்போது அதிமுக எம்எல்ஏக்கள் 25 பேரின் ஆதரவு விஜய்க்கு இருக்கிறது. எனவே காங்கிரஸுக்கு எந்த துறையை ஒதுக்குவது? அதிமுகவை தக்க வைக்க வேண்டும் எனில் அவர்களுக்கு சரியான துறையை ஒதுக்க வேண்டுமே! எனவே அதிமுகவை முடித்துக்கொண்டு காங்கிரஸை கவனித்துக்கொள்ளலாம் என்று விஜய் காங்கிரஸை டீலில் விட்டிருக்கிறார்.
இந்த நேரத்தில் கேரளாவுக்கு போனால் இந்த விஷயம் குறித்து ராகுல் காந்தியை நேரில் சந்திக்க வேண்டி வரும். அவர் இது குறித்து கேட்டால் விளக்கம் சொல்ல வேண்டி வரும். எனவே எதற்கு அங்கு போய்க்கொண்டு? என்று நினைத்துதான் சதீசன் பதவியேற்பு விழாவை விஜய் கண்டுக்கொள்ளாமல் விட்டதாக சொல்லப்படுகிறது.
அரசியல் மரபு
மூன்றாவது காரணம், அரசியல் மரபுதான். அதாவது முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவரை நேரில் சென்று சந்திப்பதே அரசியல் மரபு. அதை விட்டுவிட்டு மக்களவை எதிர்க்கட்சி தலைவருடன் கைகோர்ப்பது விஜய்யின் அரசியல் கெரியருக்கே முடிவுரை எழுதிவிடலாம் என்பதால் சதீசன் பதவியேற்பு விஷயத்தில் விஜய் சைலன்ட்டாக இருந்துவிட்டார் என்றும் சொல்லப்படுகிறது.
இன்னும் எம்பி எலெக்ஷன், உள்ளாட்சி தேர்தல் எல்லாம் வரப்போகிறது. இப்போவே இப்படி காங்கிரஸை கண்டுக்கொள்ளாமல் விட்டுவிட்டால் எப்படி? இது சரியாக இருக்குமா? என்று கூட்டணிக்குள் குழப்ப குரல்கள் எழுந்திருக்கிறது.
-
Singappen Force: சிங்கப் பெண் அதிரடி படை எப்படி செயல்படும்.. ஐஜி பவானீஸ்வரி விளக்கம் -
அடிதாங்க முடியல குருநாதா.. விஜய் டெல்லிக்கு போன நேரத்தில்! பனையூருக்கு எம்எல்ஏக்களை அழைத்த புஸ்ஸி! -
திடீரென போனை போட்டு பேசிய விஜய்.. பொருளாதார ஜாம்பவான்களுடன் ரகசிய ஆலோசனை.. என்ன காரணம்? -
மாசம் ரூ.4000 கன்பார்ம்! சிங்கப்பெண் வந்தாச்சு.. விஜய் கையில் எடுக்கும் அடுத்த முக்கிய திட்டம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
தவெகவின் வியூகம்.. புஸ்ஸி ஆனந்துடன் பேச்சுவார்த்தை நிறைவு.. அடுத்த வாரத்தில் இணையும் விஜயபாஸ்கர்? -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
மின் வெட்டை தடுக்க களமிறங்கும் 10 சிறப்பு குழுக்கள்.. பறக்கும் 125 மின் தடை நீக்க ரோந்து வாகனங்கள்! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
காலை தொட்டு கேட்கிறோம்.. எங்களை சேர்த்துக்கோங்க.. தவெகவினரிடம் மேடையில் கெஞ்சிய அதிமுக நிர்வாகி -
அவரா? பெரிய தலைக்கட்டாச்சே! தவெகவுக்கு தாவும் ஜெயக்குமார்! எடப்பாடி அடுத்த தலைவலி! பரபர பாலிடிக்ஸ் -
90 நிமிடங்கள் நடந்த மீட்டிங்.. ராகுல் தலைமையை ஏற்கும் மம்தா? கச்சிதமாக காய் நகர்த்தும் காங்கிரஸ்











Click it and Unblock the Notifications