சென்னையில் இருந்து கிரீன் சிக்னல்.. கேரளாவிலும் தடம் பதிக்கும் தவெக! விஜய்யின் டாப் ஸ்பீட் அரசியல்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: தமிழகத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி, பிரம்மாண்டக் கூட்டணியோடு முதலமைச்சராக அரியணை ஏறிய விஜய் அரசு மீதான எதிர்பார்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. அதேநேரம் விஜய் தனது கட்சியைத் தமிழகத்தோடு நிறுத்திக்கொள்ளும் எண்ணத்தில் இல்லை போலத் தெரிகிறது. அண்டை மாநிலமான கேரளாவிலும் தமிழக வெற்றிக் கழகம் கால் பதிக்கத் தயாராகி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்தவர் விஜய். அப்படி உச்சத்தில் இருக்கும்போதே அரசியலில் நுழைந்து, தேர்தலையும் எதிர்கொண்டார். தமிழ்நாடு தேர்தலில் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை என்ற போதிலும் தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்தது. இதையடுத்து காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு விஜய் தமிழக முதல்வராகப் பதவியேற்று இருக்கிறார்.

Vijay TVK in Kerala Vijay TVK Kerala

கேரளா

இது ஒரு பக்கம் இருக்க.. சினிமாவில் விஜய்க்கு தமிழகத்திற்கு இணையாகக் கேரளாவிலும் பிரம்மாண்ட மார்க்கெட் இருப்பது அனைவருக்கும் தெரியும். இப்போது அந்தச் சினிமா பலத்தை, அரசியல் பலமாக மாற்றக் கேரளா ரசிகர்கள் தீவிரமாகக் களமிறங்கியுள்ளனர். கடந்த வாரம் வயநாட்டில் உள்ள விஜய் ரசிகர்கள் உள்ளூர் தவெக கிளையை உருவாக்குவதற்கான முதற்கட்ட வேலைகளைத் தொடங்கினர்.

அதனைத் தொடர்ந்து, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பாலக்காட்டிலும் தவெக ரசிகர்களின் ஆலோசனைக் கூட்டம் அதிரடியாக நடந்து முடிந்துள்ளது. இந்தக் கூட்டங்களில் இளைஞர்கள் மட்டுமன்றி, பெண்களும் பெருமளவில் கலந்துகொண்டது கேரளா அரசியல் வட்டாரங்களை உற்றுநோக்க வைத்துள்ளது.

மக்கள் இயக்கம்

கேரளாவில் ஏற்கனவே 'தளபதி விஜய் மக்கள் இயக்கம்' என்ற பெயரில் ஆயிரக்கணக்கான நற்பணி மன்றங்கள் உள்ளனர். அவர்கள் தமிழ்நாட்டைப் போலவே கேரள மக்களுக்கு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகின்றன. அவை இப்போது 'தவெக' எனப் பெயர் மாற்றப்பட்டாலும், இன்னும் அங்குப் புதிய அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்படவில்லை.

கிரீன் சிக்னல்

சென்னையில் இருந்து தளபதி விஜய்யின் அதிகாரப்பூர்வ கிரீன் சிக்னல் வந்தவுடன், கேரளாவிலும் தவெக அரசியல் கட்சியாகத் தடம் பதிக்கும் என நிர்வாகிகள் ஆவலோடு காத்திருக்கின்றனர். கட்சியின் தரப்பிலிருந்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வராத நிலையிலும், இணையத்தில் தவெக கேரளா மாநிலக் குழு, தவெக கேரளா பெண்கள் கமிட்டி போன்ற பக்கங்கள் முளைத்துள்ளன. இவை அதிகாரப்பூர்வப் பக்கங்கள் இல்லை என்றாலும் கூட பல ஆயிரம் பேர் இந்தப் பக்கங்களைப் பாலோ செய்கிறார்கள்.

கேரளாவைப் பொறுத்தவரை இப்போது அங்குக் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் மட்டுமே பிரதானக் கட்சிகளாக உள்ளன. கடந்த 10 ஆண்டுகளாக அங்கு இடதுசாரிகள் ஆட்சி இருந்த நிலையில், இப்போது காங்கிரஸ் வென்றுள்ளது. மூன்றாவது கட்சியாக பாஜக வளர முயலும் நிலையில், இப்போது தவெகவும் அங்குக் களத்தில் இறங்கியுள்ளது. மூன்றாவது பெரும் கட்சியாக உருவெடுக்க வேண்டும் என்பதே கேரளாவில் உள்ள விஜய் ரசிகர்களின் ஆசையாக இருக்கிறது.

அதிருப்தி

கேரளத் தேர்தலில் காங்கிரஸ் வென்ற போதிலும், அண்மையில் கேரளாவில் முதலமைச்சரைத் தேர்ந்தெடுக்கக் காங்கிரஸ் மேலிடம் 11 நாட்கள் இழுத்தடித்தது. மக்கள் ஆதரவு சதீசனுக்கு இருந்த போதிலும், டெல்லி மேலிடம் கிட்டத்தட்ட இரு வாரங்கள் முடிவெடுக்கவில்லை. இதுபோன்ற காரணங்களால் தேசியக் கட்சிகள் மீது அதிருப்தியடைந்த இளைஞர்களை விஜய்யின் இந்த 'டாப்-ஸ்பீட்' அரசியல் பிம்பத்தை நோக்கி நகர்கிறார்கள். தமிழ்நாட்டைப் போல கேரளாவிலும் விஜய்க்கு ரசிகர்கள் உள்ள நிலையில், அது தேர்தலில் எதிரொலிக்குமா என்பதை நாம் பொறுத்து இருந்தே பார்க்க வேண்டும்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+