தனுஷ்கோடியில் பலத்த சூறாவளி: ரயில்கள் ரத்து!
ராமேஸ்வரம்:
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக ராமேஸ்வரம் கடலில் கொந்தளிப்புஅதிகமாக உள்ளது.
இதனால் பாம்பன், ராமேஸ்வரம், தனுஷ்கோடி ஆகிய பகுதிகளில் பலத்த சூறாவளிக் காற்று வீசி வருவதால்பாம்பன் வழியாக செல்லும் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுவிட்டன.
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த மண்டலம் உருவாகியிருப்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடும்மழை பெய்து வருகிறது. இந் நிலையில் தனுஷ்கோடி பகுதியில் பலத்த சூறாவளிக் காற்று வீசி வருகிறது. கனமழையும் பெய்து வருகிறது.
பல குடிசைகள் காற்றில் பறந்து விட்டன.
புயல் காற்று போல சூறாவளி இருப்பதால், தனுஷ்கோடி பகுதியில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல முடியவில்லை.
இந்தச் சூழ்நிலை காரணமாக பாம்பன் கடல் பாலத்தின் வழியாக ராமேஸ்வரம் வரும் ரயில்கள் அனைத்தும்பாம்பனுடன் நிறுத்தப்பட்டுவிட்டன. பஸ் முலம் மட்டுமே போக்குவரத்து நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications