அடுத்த தேர்தலிலும் திமுகவுடன் உறவை தொடர விரும்புகிறோம்: பா.ஜ.க.
சென்னை:
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலிலும், திமுகவுடன் உறவைத் தொடர மாநிலபா.ஜ.க. விரும்புவதாக அக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜே. ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழகத்தைப் பொருத்தவரை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மாற்றம்இருக்காது என்றே நாங்கள் நினைக்கிறோம். இப்போதுள்ள கூட்டணியே வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும்தொடர வேண்டும் என்றும் விரும்புகிறோம்.
இது தொடர்பாக விரைவில் பிரதமர் வாஜ்பாய், துணைப் பிரதமர் அத்வானி ஆகியோரை கட்சியின் தமிழகநிர்வாகிகள் சந்தித்து விளக்குவர். திமுகவுடனான எல்லா கருத்து வேறுபாடுகளுக்கும் அப்போது தீர்வு காணப்படும்.
பொடா சட்டத்தை எதிர்த்து டிசம்பர் 1ம் தேதி திமுக நடத்தவுள்ள சிறை நிரப்பும் போராட்டத்தின் மூலம், பா.ஜ.க.உறவை முறித்துக் கொள்ள திமுக விரும்புவதாக எடுத்துக் கொள்ள முடியாது.பொடா குறித்த தனது கருத்தைத்தெரிவிக்கிறது திமுக, அதை யாரும் தடுக்க முடியாது என்றார் அவர்.
சமீபத்தில் பிரதமர் வாஜ்பாய் சென்னை வந்து கருணாநிதியைச் சந்தித்துவிட்டுத் திரும்பியது முதல் திமுகவிஷயத்தில் வாய்க்கு வந்தபடி பேசுவதை பா.ஜ.கவினர் நிறுத்திக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திமுகவுடனான உறவை சீர்குலைத்து மாநில நிர்வாகிகள் தான் என வாஜ்பாய் கடிந்து கொண்டதே இதற்குக் காரணம்என்று கூறப்படுகிறது. அதிமுக தலைவர் ஜெயலலிதாவுடன் எந்த அரசியல் உறவையும் தான் விரும்பவில்லைஎன்றும் வாஜ்பாய் கூறியுள்ளார்.
அதே போல திமுக தங்களது கூட்டணியை விட்டு வெளியே போன பின், அதிமுகவும் தங்களை ஆதரிக்காமல்கைவிட்டால், திமுகவும் இல்லாமல், அதிமுகவும் இல்லாமல் நட்டாற்றில் விடப்படும் சூழல் எழலாம் என மாநிலபா..ஜ.க. தலைவர்கள் யோசிக்க ஆரம்பித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications