விரைவில் தர்மபுரி மாவட்டம் பிரிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டம் உதயம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கிருஷ்ணகிரியைத் தலைமையகமாகக் கொண்டு ஒரு மாவட்டத்தை உருவாக்க முதல்வர் ஜெயலலிதா முடிவுசெய்துள்ளார்.

தற்போது தமிழகத்தில் 29 மாவட்டங்கள் உள்ளன. இந் நிலையில் மிகவும் பின் தங்கிய தர்மபுரி மாவட்டத்தைப்பிரித்து கிருஷ்ணகிரி மாவட்டத்தை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது.

மாவட்டப் பிரிப்பு குறித்து அமைச்சர்கள் பொன்னையன், ஓ.பன்னீர்செல்வம், ஜெயக்குமார், தலைமைச் செயலாளர்லட்சுமி பிரனேஷ், நிதி மற்றும் வளர்ச்சித்துறைச் செயலாளர் நாராயணன், வருவாய்த்துறைச் செயலாளர் சுந்தரதேவன், வருவாய் நிர்வாக சிறப்பு ஆணையர் சந்தானம், பொதுத்துறைச் செயலாளர் பிச்சாண்டி ஆகியோருடன்ஜெயலலிதா நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார்.

தர்மபுரி மாவட்டமும் கிருஷ்ணகிரி தாலுகாவும் அதிமுகவின் கோட்டைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

துறைகளைக் குறைக்க முடிவு:

சென்னை நுங்கம்பாக்கம் கல்வித்துறை வளாகத்தில் உள்ள ஊழியர் சங்கங்களின் அலுவலகங்களை உடனடியாகமூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதே போல தலைமைச் செயலகத்தில் உள்ள துறைகளின் எண்ணிக்கையைகணிசமாக குறைக்கவும் திட்டமிட்டுள்ளது.

தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் மொத்தம் 33 துறைகள் உள்ளன. இவற்றில் உள்துறை, பொதுப்பணித்துறை, பொதுத் துறை என முக்கிய துறைகளும் அடங்கும். இதுதவிர பல்வேறு துறை அலுவலகங்கள்வெவ்வேறு இடங்களில் இயங்கி வருகின்றன.

தற்போது சிக்கன நடவடிக்கையின் ஒரு பகுதியாக தலைமைச் செயலகத்தில் உள்ள11 துறைகளை, மற்றதுறைகளுடன் இணைத்து விடலாமா என்று அரசு யோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பான விரைவில் அறிவிப்பு வெளியாகலாம்.

கல்வி சங்க அலுவலகங்களை மூட உத்தரவு:

இதற்கிடையே சென்னை நுங்கம்பாக்கம் கல்வித்துறை வளாகத்தில் உள்ள ஊழியர் சங்க அலுவலகங்களைஉடனடியாக மூடுமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசு ஊழியர் ஸ்டிரைக்கைத் தொடர்ந்து, அரசு ஊழியர் சங்கங்களுக்கு வழங்கப்பட்டிருந்த அங்கீகாரத்தை அரசுரத்து செய்தது. மேலும், தலைமைச் செயலக வளாகத்தில் இருந்த பல்வேறு ஊழியர் சங்க அலுவலகங்களை அரசேமூடி சீல் வைத்தது.

இதைத் தொடர்ந்து ஊழியர் சங்கங்களின் செயல்பாடுகள் முடங்கியுள்ளன. சில சங்கங்கள் மரத்தடியில் இயங்கிவருகின்றன.

இந் நிலையில், நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்வித்துறை வளாகத்தில் அமைந்துள்ள பல்வேறு ஊழியர்சங்கங்களையும் உடனடியாக மூடுமாறு அரசு உத்தரவிட்டுள்ளது. மூடாவிட்டால் அரசே அவற்றை மூடி சீல்வைக்கும் என்று தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+