7 தூண்களுடன் ராஜிவ் நினைவிடம்: கலாம் இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்
சென்னை:
ஸ்ரீபெரும்புதூரில் அமைக்கப்பட்டுள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தை இன்று நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார்ஜனாதிதி அப்துல் கலாம்.
1991ம் ஆண்டு மே 21ம் தேதி இதே இடத்தில் தான் ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். வைணவர்களின்திருத்தலமாகவும், ராமனுஜர் பிறந்த பூமியாதலால் பெருமையுடனும் பார்க்கப்பட்ட ஸ்ரீபெரும்புதூர், ராஜீவைபலிகொண்ட ஊர் என்ற பெயரைப் பெற்றது.
அந்தப் படுகொலைக்குப் பின் காங்கிரஸ் கட்சி அவருக்கு நினைவிடத்தை உருவாக்கியது. இப்போது மத்தியஅரசின் பொதுப் பணித்துறை இந்த நினைவிடத்தைக் ரூ,. 21.15 கோடி செலவில் பிரமாண்டமாகக் கட்டிமுடித்துள்ளது. இந்த நிலத்தை தமிழிக அரசு இலவசமாக வழங்கியது.
இந்த நினைவிடத்தில் 50 அடி உயரம் கொண்ட 7 தூண்கள் உள்ளன. தர்மம், உண்மை, நீதி, தியாகம், வளர்ச்சி,அமைதி, அறிவியல் வளர்ச்சி ஆகியவற்றை நினைவு கூறும் வகையில், இந்த 7 தூண்களும் நிறுவப்பட்டுள்ளன.
தூண்களுக்கு கங்கை, காவிரி, யமுனை, கோதாவரி, பிரம்மபுத்திரா, நர்மதா, சிந்து ஆகிய நதிகளின் பெயர்கள்சூட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு தூணிலும் கலை வேலைப்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இதுதவிர சிந்து வெளி நாகரீகத்திலிருந்து தற்போதைய நவீன உலகம் வரையிலான மனித குல வளர்ச்சி குறித்தவிளக்கும் காட்சியகமும் நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
மொத்தள்ள 12 ஏக்கர் நிலத்தில் 7 ஏக்கர் பரப்பில் மட்டுமே தற்போது நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ளஇடத்தில் விரைவில் வேறு பல கட்டடங்கள் கட்டப்பட உள்ளன.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவரது மகள் பிரியங்கா காந்தி, மருமகன்ராபர்ட் வதேரா ஆகியோர் சென்னை வந்து சேர்ந்தனர். மேலும் காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களும் வந்தனர்.
முன்னதாக பிரியாங்கா தனது கணவர் ராபர்ட்டுடன் முதலில் தனி விமானம் மூலம் சென்னை வந்தார். பின்னர்சோனியாவின் வருகைக்காக விமான நிலையத்தில் காத்திருந்தனர். விமான நிலைய புல்வெளியில் அவர்கள்அமர்ந்திருந்தபோது, அங்கு ஒரு பாம்பு வந்ததால் பெரும பரபரப்பு ஏற்பட்டது. அதை பாதுகாப்பு அதிகாரிகள்அடித்துக் கொன்றனர்.
பின்னர் சிறிது நேரத்தில் சோனியா காந்தி தனி விமானம் மூலம் வந்து சேர்ந்தார். அவரை தமிழக காங்கிரஸ்தலைவர் சோ.பாலகிருஷ்ணன், செயல் தலைவர் இளங்கோவன், அகில இந்திய செயலாளர் ஜி.கே.வாசன்உள்ளிட்டோர் வரவேற்றனர்.
பின்னர் சோனியா, பிரியங்கா, ராபர்ட் ஆகியோர் ஹெலிகாப்டரில் ஸ்ரீபெரும்புதூருக்குக் கிளம்பிச் சென்றனர்.இதேபோல, மகாராஷ்டிர மாநில முதல்வர் சுசில் குமார் ஷிண்டே, டெல்லி முதல்வர் ஷீலா தீக்ஷித், ராஜஸ்தான்முதல்வர் அசோக் கெலோட், கர்நாடக முதல்வர் கிருஷ்ணா, கர்நாடக உள்துறை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே,கேரள முதல்வர் ஆண்டனி ஆகியோரும் சென்னை வந்து ஸ்ரீபெரும்புதூர் சென்றனர்.
கலாம் மற்றும் சோனியாவின் வருகையையொட்டி சென்னையில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
முக்கியஸ்தர்களை சென்னையில் இருந்து காரில் அழைத்துச் செல்வதைத் தவிர்த்துவிட்டு, அவர்கள்ஹெலிகாப்டர்கள் மூலமே ஸ்ரீபெரும்புதூர் அழைத்துச் செல்லப்பட்டனர்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மீதான நக்ஸல்களின் கண்ணி வெடித் தாக்குதலையடுத்து இந்த முடிவுஎடுக்கப்பட்டது.
ஸ்ரீபெரும்புதூரில் பாதுகாப்புப் பணியில் ஆயிரக்கணக்கான போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.
மாலை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஹெலிகாப்டரில் ஸ்ரீபெரும்புதூர் வந்த கலாம் ராஜிவ் நினைவிடத்தைநாட்டுக்கு அர்ப்பணித்தார்.
கடைசி நேரத்தில் ஜெவுக்கு அழைப்பு:
ராஜிவ் காந்தி நினைவிட விழாவில் பங்கேற்க முதல்வர் ஜெயலலிதாவுக்கு மத்திய அரசோ, காங்கிரஸ் கட்சியோஅழைப்பு விடுக்கவில்லை.
இந் நிலையில் நேற்று மாலை மத்திய அரசின் பொதுப்பணித்துறை மேற்கு மண்டல இயக்குனர் சின்னச்சாமி,முதல்வரைச் சந்தித்து அழைப்பிதழ் தந்தார். ஆனாலும் நிகழ்ச்சியில் ஜெயலலிதா பங்கேற்கவில்லை.












Click it and Unblock the Notifications