கர்நாடகத்திலும் தான் வறட்சி நிலவுகிறது: கிருஷ்ணா அடாவடி பதில்
சென்னை:
தமிழகத்தைப் போல கர்நாடகத்திலும் தான் தொடர்ந்து வறட்சி நிலவுகிறது என்று அம் மாநில முதல்வர்எஸ்.எம்.கிருஷ்ணா கூறினார்.
ராஜிவ் காந்தி நினைவிடத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க ஸ்ரீபெரும்புதூர் செல்லும் வழியில்சென்னை வந்த அவரிடம், காவிரி விவகாரம் குறித்து நிருபர்கள் கேட்டனர்.
இதற்கு பதிலளித்த கிருஷ்ணா, கர்நாடகத்தில் நிலவும் வறட்சியையும் உண்மை நிலவரத்தையும் கருத்தில் கொள்ளதமிழகம் முன் வர வேண்டும். நீரில்லாமல் தமிழகத்தில் விவசாயிகள் தொடர்ந்து பல சாகுபடிகள் இழந்துவிட்டதாகசொல்கிறீர்கள். கர்நாடகத்திலும் தான் சாகுபடியை இழந்து வருகிறோம்.
காவிரி ஆணையத்தைக் கூட்ட வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக கோரிக்கை விடுத்திருப்பதாகசொல்லப்படுவது குறிதது எனக்கு ஏதும் தெரியாது. ஆணையத்திடம் என்ன சொல்ல வேண்டுமோ அதை நாங்கள்ஏற்கனவே சொல்லிவிட்டோம் என்றார்.












Click it and Unblock the Notifications