தமிழக நகர்ப் பகுதிகளில் உள்ள குடிசைகள் எண்ணிக்கை 53 லட்சம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

இந்தியாவில் நகர்ப் பகுதிகளில் மொத்தம் 6.20 கோடி குடிசைகள் உள்ளன. இதில், தமிழகத்தில் மட்டும் 53 லட்சம்குடிசைகள் உள்ளன என மத்திய நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்புத்துறை இணையமைச்சர் பண்டாருதத்தாத்ரேயா தெரிவித்தார்.

சென்னையில் நிகழ்ச்சியொன்றில் பேசிய அவர், அரசு நிலங்களில் குடிசைகள் போட்டுள்ளவர்களுக்கு பட்டாவழங்கும்போது கணவன், மனைவி இருவர் பெயரிலும் சேர்த்து பட்டா வழங்குவது என்று முடிவுசெய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் பெண்களுக்கும் வீட்டில் உரிமை இருக்கும். நகர்ப் பகுதிகளில் ஆங்காங்கே உள்ள குடிசைப்பகுதிகளை குறைத்து அவர்களை ஒரே பகுதியில் வசிக்கச் செய்யவும் முயற்சி எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

இதற்கிடையே தமிழக அரசு அமைக்க உத்தேசித்துள்ள புதிய தலைமைச் செயலக கட்டடத்தைக் கட்ட வீட்டுவசதிக்கான மத்திய அரசின் கூட்டுறவு வங்கி, ஹட்கோ ரூ. 450 கோடி நிதியுதவி தர முன் வந்துள்ளதாகவும்தத்தாத்ரேயா தெரிவித்தார்.

இந்த நிதியுதவிக்கான வட்டி விகிதத்தைக் குறைக்குமாறு தமிழக அரசு கோரியுள்ளது. இது தொடர்பாக மத்தியஅரசு பரிசீலனை செய்யும்.

மேலும் சென்னைக்கு அருகே புழலில் புதிய சிறைச்சாலை அமைக்கவும், போலீஸ் குடியிருப்புகள் கட்டவும், குடிநீர்,சாலைகள், பாலங்கள கட்டும் திட்டங்களுக்கும் தமிழக அரசு ஹட்கோவிடம் நிதியுதவி கோரியுள்ளது. இந்தநிதியுதவி நிச்சயம் வழங்கப்படும் என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+