அவதூறு வழக்கால் மன உளைச்சல்: தமிழக அரசிடம் ரூ. 10 லட்சம் நஷ்ட ஈடு கேட்கிறார் இளங்கோவன்
சென்னை:
பழிவாங்கும் நோக்கத்துடன் தமிழக அரசு என் மீது வேண்டுமென்றே அவதூறு வழக்குப் போட்டதால் மனஉளைச்சலுக்கு உள்ளாகி இருக்கிறேன். இதனால் எனக்கு இந்த அரசு ரூ. 10 லட்சம் நஷ்டஈடு தர வேண்டும் என்றுகோரி காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இதை ஏற்றுக் கொண்ட சென்னை செசன்ஸ் நீதிமன்றம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பா கடத்தல் விவகாரத்தை தமிழக அரசு சரிவர கையாளவில்லை என்றுஇளங்கோவன் பேசியதையடுத்து அவர் மீது தமிழக அரசு அவதூறு வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்குநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது இளங்கோவன் தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில்,
எதிர்க் கட்சியைச் சேர்ந்த என் மீது தமிழக அரசு பழிவாங்கும் நோக்கில் வழக்குப் போட்டுள்ளது. இதில் அதிகாரதுஷ்பிரயோகம் இருப்பது தெளிவாகவே தெரிகிறது. இதன்மூலம் எதிர்க் கட்சியினரின் அடிப்படைஉரிமைகளைப் பறிக்க அரசு முயல்கிறது.
இந்த வழக்கினால் நான் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறேன். இதனால் அரசு தான் எனக்கு ரூ. 10லட்சம் நஷ்டஈடு தர வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து இந்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார் நீதிபதிராமலிங்கம்.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம்












Click it and Unblock the Notifications