திருச்சி ஆர்.டி.ஓ. அலுவலக ஊழியர்கள் 7 பேர் கைது
திருச்சி:
திருச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ரூ. 17 லட்சம் மோசடி செய்த வழக்கில் 7 ஊழியர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
திருச்சி, மண்ணார்புரத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் பெருமளவில்லஞ்சம் வாங்குவதாகவும், பல்வேறு மோசடிகளில் ஈடுபடுவதாகவும் குற்றப் பிரிவு போலீஸாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து ஊழல் தடுப்புப் போலீஸார் உதவியுடன் 2 மாதங்களுக்கு முன்பு திருச்சி வட்டார போக்குவரத்துஅலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தப்பட்டது.
அப்போது வாகனங்களை பதிவு செய்வது, உரிமம் வழங்குவது உள்ளிட்ட பணிகளில் ரூ. 17 லட்சம் வரை மோசடிநடந்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. மேலும் கணிப்பொறிகள் மூலம் தரப்படும் ரசீதுகளை திருத்தியும் அழித்தும்பல லட்சம் மோசடி செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து போக்குவரத்து அலுவலகத்தில் பணியாற்றி வரும் 14 ஊழியர்கள் சஸ்பெண்ட்செய்யப்பட்டனர். இவர்களிடம் விசாரணை நடந்துவருகிறது.
போக்குவரத்துத் துறை செயலாளரும் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
இந்நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்களில் 7 இளநிலை உதவியாளர்கள் இன்று கைது செய்யப்பட்டனர்.அவர்கள் மீது மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது!












Click it and Unblock the Notifications