ஜெ. சொத்து குவிப்பு வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற கோரும் மனு மீது விசாரணை ஆரம்பம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

முதல்வர் ஜெயலலிதா மற்றும் தோழி சசிகலா மீதான வருமானத்துக்கு மீறிய சொத்து சேர்த்த வழக்குகளின்விசாரணையை தமிழகத்தில் இருந்து வேறு மாநில நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி திமுக தாக்கல் செய்த மனு மீதானவிசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் தொடங்கியது.

இந்த வழக்கு விசாரணை சென்னை தனி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதில் பெரும்பாலான சாட்சிகள் பல்டிஅடித்துள்ளன. வழக்கு விசாரணையை அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் ஜெட் வேகத்தில் நடத்தி வருகின்றனர்.இதனால் இந்த வழக்கில் இருந்து ஜெயலலிதாவையும் சசிகலாவையும் தப்ப வைக்க முயற்சி நடப்பதாக திமுககருதுகிறது.

இதையடுத்து இந்த வழக்கை தமிழகத்தில் இருந்து வேறு மாநில நீதிமன்றத்துக்கு மாற்றிவிடுமாறு திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த மனு மீதான விசாரணையை நீதிபதிகள் வரியவா, நீதிபதி செமா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச்இன்று தொடங்கியது.

அப்போது அன்பழகனின் சார்பில் ஆஜரான உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் அந்தியர்ஜூன ஒரு மனுவைத்தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுளளதாவது:

தமிழகத்தில் இப்போது ஜெயலலிதா ஆட்சியில் உள்ளார். இந் நிலையில் அவர் மீதான இந்த சொத்துக் குவிப்புவழக்கை அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் நியாயமாக நடத்த முன் வரவில்லை.

1997ம் ஆண்டு தனி நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை தொடங்கியது. 2001ல் ஜெயலலிதா ஆட்சிக்குவந்தார். இந்த 4 வருட காலத்திற்குள் 76 பேர் ஜெயலலிதாவுக்கு எதிராக சாட்சியம் அளித்திருந்தனர்.

ஆனால், ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பின்னர் இந்த 76 சாட்சிகளையும் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் மீண்டும்சாட்சி சொல்ல வருமாறு அழைத்தனர். அப்போது இவர்களில் 64 பேர் தங்களது நிலையை மாற்றிக் கொண்டனர்.இந்த சாட்சிகள் பல்டி அடித்தன.

முன்பு சொன்னதை இவர்கள் மாற்றிச் சொன்னபோது அதை அரசுத் தரப்பு வழக்கறிஞர் தடுத்திருக்க வேண்டும்.

ஏன் பல்டி அடிக்கிறீர்கள் என்று கேள்வியாவது எழுப்பியிருக்க வேண்டும். ஆனால், எந்தவிதமான கேள்வியையும்எழுப்பாமல் இந்த 64 பேரின் புதிய சாட்சிகளும் பதிவு செய்யப்பட்டுவிட்டன.

அதே நேரத்தில் இவர்களை பல்டி சாட்சிகளாகவும் அரசுத் தரப்பு அறிவிக்கவில்லை. அவர்கள் ஜெயலலிதாவுக்குஆதரவாகச் சொன்ன சாட்சியத்தை பதிவு செய்து விட்டார்கள். இதனால் வழக்கே தடுமாறிக் கொண்டுள்ளது.

ஜெயலலிதாவின் வீட்டு நகைகள், 100 கைக்கெடிகாரங்களை மதிப்பிட்ட அப்ரைசர்கள் கூட சாட்சிகளை மாற்றிச்சொல்லி பல்டி அடித்துவிட்டனர்.

இந்த வழக்கில் ஜெயலலிதாவை நீதிமன்றத்துக்கு அழைத்து விசாரிக்கவே இல்லை. அதற்குப் பதிலாக அவரதுவீட்டுக்கே கேள்விகளை அனுப்பி பதில்களை வாங்கி வருகிறார்கள் என்றார்.

அப்போது இடைமறித்த தமிழக அரசின் வழக்கறிஞர் வேணுகோபால், இதில் தவறேதும் இல்லை என்றார்.

ஆனால், குறுக்கிட்ட நீதிபதசி வரியவா, குற்றம் சாட்டப்பட்டவர் (ஜெயலலிதா) வெகு தொலைவில் இருந்தால் அதுபோல வீட்டுக்கு கேள்விகளை அனுப்பலாம். ஒரே ஊரில் இருந்து கொண்டு இதைச் செய்வது சரியல்ல என்றார்.

தொடர்ந்து பேசிய திமுக வழக்கறிஞர் அந்தியர்ஜூனா, இந்த வழக்கு இதேரீதியில் விசாரிக்கப்பட்டால் நிச்சயம்நியாயம் கிடைக்காது. மேலும் வழக்கும் வேக வேகமாக நடத்தப்படுவதால் இதில் பெரும் சந்தேகங்களும்எழுகின்றன.

இதைத் தடுக்கும் வகையில் இந்த வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.

தேவைப்பட்டால் இந்த வழக்கில் மத்திய அரசையும் ஒரு பிரதிவாதியாக சேர்க்கவும் நீதிமன்றம் உத்தரவிடலாம்.அதன் மூலம் அரசுத் தரப்பு விசாரணைக்கு தமிழக போலீசுக்குப் பதில் சிபிஐயை கூட நியமிக்க முடியும் என்றார்.

ஜெயலலிதா, சசிகலா தவிர மாஜி வளர்ப்பு மகன் சுதாகரன், எம்.பி. தினகரன் ஆகியோர் மீதும் இந்த வருமானத்தைமீறிய சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+