தமிழர் பகுதி சீரமைப்புக்கு இந்தியா மேலும் ரூ. 300 கோடி உதவி
சென்னை:
போரினால் பாதிக்கப்பட்ட இலங்கையின் தமிழர் பகுதிகளை சீரமைக்க மேலும் ரூ. 300 கோடி நிதியுதவிவழங்கப்படும் என வெளியுறவுத்துறை அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா கூறினார்.
இலங்கைத் தலைநகர் கொழும்பில் நடைபெறவுள்ள இந்தியா-இலங்கை கூட்டுக் கமிஷன் கூட்டத்தில் பங்கேற்கஇன்று சின்ஹா இலங்கை புறப்பட்டார். வழியில் சென்னை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம்பேசுகையில்,
இலங்கையில் அதிபர் சந்திரிகா, பிரதமர் ரணில் விக்கிரசிங்கே ஆகியோரையும் சந்திக்கவுள்ளேன். கூட்டுக்கமிஷன் கூட்டத்தின்போது, தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் அடிக்கடி தாக்கப்படுவது குறித்துவிவாதிக்கப்படும்.
இலங்கை இனப் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர் பகுதிகளை சீரமைக்க, இலங்கை அரசுக்கு இதுவரை ரூ. 450கோடி நிதியை இந்தியா வழங்கியுள்ளது. மேலும் ரூ. 300 கோடி உதவி வழங்கப்படும்.
மாட்ரிட் நகரில் நடக்கும் இலங்கை மறுசீரமைப்புக்கான நிதி திரட்டும் மாநாட்டில் பங்கேற்பது குறித்து இந்தியாஇன்னும் முடிவேதும் எடுக்கவில்லை என்றார்.
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு இலங்கை அரசிடம் கோருவீர்களாஎன்று ஒரு நிருபர் கேட்டபோது, இது தொடர்பாக பேசியுள்ளோம். வாய்ப்பு கிடைத்தால் இந்தமுறையும் பேசுவேன்என்றார்.
மேலும், இனப் பிரச்சனையில் மூன்றாவது நாடு ஏதும் செய்ய முடியாது. ஒப்பந்தம் ஏற்பட்டால் அது புலிகளுக்கும்இலங்கை அரசுக்கும் இடையில் தான் ஏற்பட வேண்டும் என்றார் யஷ்வந்த் சின்ஹா.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications