பயங்கர ஆயுதங்களுடன் பசுபதி பாண்டியன் கைது
திண்டுக்கல்:
தேவேந்திர குல வேளாள சங்கத் தலைவரும் சமீபத்தில் போலீஸ் எண்கெளன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டவெங்கடேச பண்ணையாரின் பரம விரோதியுமான பசுபதி பாண்டியன்
பயங்கர ஆயுதங்களுடன் திண்டுக்கல்லில் கைது செய்யப்பட்டார். அவரது கூட்டாளிகள் 9 பேரும் கைதுசெய்யப்பட்டனர்.
தேவேந்திர குல வேளாளர் சங்கத் தலைவர் பசுபதி பாண்டியனின் தம்பி தாமோதரன். இவர் தூத்துக்குடியில் பலகொலை, கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்டவர். இவரைத் தேடி வந்த போலீஸார் திண்டுக்கல்லில் உள்ளபசுபதி பாண்டியனின் வீட்டில் தாமோதரன் பதுங்கி இருப்பதை அறிந்தனர்.
இதையடுத்து பசுபதி பாண்டியனின் வீட்டை நேற்று இரவு போலீஸார் முற்றுகையிட்டனர். ஆனால் தாமோதரன்வீட்டில் இல்லை. மாறாக பசுபதி பாண்டியனுடன், 9 பேரும் வீட்டில் இருந்தனர்.
அவர்களது வீட்டை போலீஸார் சோதனையிட்டபோது பட்டாக் கத்திகள், நாட்டு வெடிகுண்டுகள், கைஎறிகுண்டுகள் ஆகியவை இருந்தன. இதைத் தொடர்ந்து அவர்கள் அனைவரையும் கைது செய்யப்பட்டனர்.
பசுபதி பாண்டியன் மீதும் பல கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. தூத்துக்குடியில் இருந்தால் தனதுஉயிருக்கு ஆபத்து நேரலாம் என்பதால் திண்டுக்கல்லில் அவர் தலைமறைவாக இருந்து வந்தார்.
பண்ணையாரின் சாவினால் கடுப்பில் உள்ள நாடார் இனத்தினரை சமாதானப்படுத்தும் முயற்சிகளில் ஒன்றாகவேபசுபதி பாண்டியனை போலீசார் கைது செய்து எண்கெளன்டர் விவகாரத்தை திசை திருப்ப முயல்வதாக அந்தச்சமுதாய மக்கள் கூறுகின்றனர்.
கைதான பசுபதி பாண்டியன் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள் சிறையில் வைக்கநீதிபதி உத்தரவிட்டதையடுத்து அவரும், கூட்டாளிகளும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications