For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அரசு ஊழியர்களுக்கு சோக தீபாவளி: ப.சிதம்பரம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

போனஸ், கருணைத் தொகை என எதுவுமே கிடைக்காத இந்த தீபாவளி அரசு ஊழியர்களுக்கு சோகதீபாவளியாகவே இருக்கப் போகிறது என்று காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை பொதுச் செயலாளர் ப.சிதம்பரம்கூறியுள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், டிஸ்மிஸ் மற்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 6,072 அரசுஊழியர்கள், ஆசிரியர்கள் வழக்கை 1 மாதத்தில் முடித்து விடுவோம் என்று உச்ச நீதிமன்றத்திடம் தமிழக அரசுதெரிவித்தது. ஆனால் வழக்கு விசாரணை நீண்டு கொண்டே போகிறது. இது வருத்தம் தருகிறது.

டிஸ்மிஸ் ஆன ஊழியர்களின் வழக்கு முடியவில்லை, சம்பளம் கிடைக்கவில்லை. மற்ற ஊழியர்களுக்கும் போனஸ்இல்லை, கருணைத் தொகை இல்லை. எனவே இந்தத் தீபாவளி அரசு ஊழியர்களுக்கு சோக தீபாவளியாகவேஇருக்கப் போகிறது என்றார் சிதம்பரம்

ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு?

இதற்கிடையே அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி (டி.ஏ) உயர்வு வழங்க தமிழக அரசு முடிவுசெய்துள்ளதாகக் கூறப்படுகிறது. தீபாவளிக்கு முன் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.

மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும்போது, மாநில அரசும் தனதுஊழியர்களுக்கு அக விலைப்படி உயர்வை அறிவிப்பது வழக்கம்.

தமிழக அரசு ஊழியர்களைப் பொருத்தவரை, 2003, ஜனவரி 1ம் தேதி முதல் 3 சதவீத அக விலைப்படி உயர்வும்,ஜூலை 1ம் தேதியிலிருந்து நான்கு சதவீத அகவிலைப்படி உயர்வும் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது.

அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் இறங்கியதன் காரணமாகவும், நிதி நிலைமையக் காரணமாகக் கூறியும்அகவிலைப்படி உயர்வை தமிழக அரசு வழங்கவில்லை. இந் நிலையில் தற்போது கடுமையான நிதி நிர்வாகம்மற்றும் நிர்வாகச் சீர்திருத்தம் காரணமாக அரசுக்கு ரூ.2000 கோடி அளவுக்கு வருவாய் கிடைத்துள்ளதாககூறப்படுகிறது.

இந் நிலையில் வரும் திங்கள்கிழமை அகவிலைப்படி உயர்வு குறித்து அரசு முக்கிய அறிவிப்பை வெளியிடஉள்ளதாகத் தெரிகிறது. இதுதவிர போக்குவரத்துக்கழக, மின்வாரிய, நுகர்பொருள் வாணிபக் கழகம், கூட்டுறவுக்கழகங்களின் ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய போனஸ் குறித்தும் முக்கிய முடிவு அறிவிக்கப்படும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X