ஐக்கிய அரபு நாட்டில் கலாம்: ஜனாதிபதியான பின் முதல் வெளிநாட்டு பயணம்
டெல்லி:
ஆசிரியர் தினத்தன்று வானொலியில் உரையாற்றிய அப்துல்கலாம் மாதம் ஒரு முறை வானொலி மூலம் மக்களைச்சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.
ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற பின்னர் முதன்முறையாக தனது வெளிநாட்டுப் பயணத்தை கலாம்மேற்கொண்டுள்ளார். முதன் முறையாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டுக்கு (யு.ஏ.இ) கலாம் புறப்பட்டுச் சென்றார்.தான் செல்லும் சிறப்பு விமானத்துக்கு தஞ்சாவூர் என்று பெயர் சூட்டச் செய்துள்ளார் கலாம்.
இந்த தஞ்சாவூர் விமானம் ஜனாதிபதி, பிரதமரின் வெளிநாட்டுப்பயணத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.
போயிங் 747 ரகத்தைச் சேர்ந்த இந்த விமானத்தில் 435 பேர் பயணம் செய்ய முடியும். இதில், குடியரசுத் தலைவர்பிரதமருக்கு தனி படுக்கை வசதிகள், உடன்வரும் அமைச்சர்கள், உயர் அதிகாரிகளுக்கு முதல் வகுப்புப் பகுதியும்மற்ற அதிகாரிகளுக்குத் தனிப்பகுதியும், அத்துடன் மாடியும் கொண்ட இந்த விமானம் ஒரு குட்டி அரண்மனைபோல காட்சி தருகிறது.
விமானத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கலாம், மாதந்தோறும் ஒருமுறை வானொலி மூலம் மக்களுடன் பேசமுடிவு செய்துள்ளேன் என்றார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைநகர் அபுதாபி விமான நிலையத்தில் பட்டத்து இளவரசர் ஷேக் கலிபாபின் சையத்அல் நஹியாவும் அனைத்து அமைச்சர்களும் டாக்டர் அப்துல் கலாமை வரவேற்று அழைத்துச் சென்றனர்.
-
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு












Click it and Unblock the Notifications