காங்கிரஸ் தலைவர்கள் புத்தக வெளியீட்டு விழாவில் கருணாநிதி பங்கேற்பு
சென்னை:
தமிழக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பீட்டர் அல்போன்ஸ் மற்றும் மற்றொரு காங்கிரஸ் தலைவர் கோபண்ணாஆகியோர் எழுதிய புத்தகங்களை திமுக தலைவர் கருணாநிதி வெளியிடவுள்ளார்.
சமீப காலமாக திமுக மற்றும் காங்கிரஸ் இடையே நட்பு உருவாகி, வலுவாகி வருகிறது. பா.ஜ.கவிடமிருந்து திமுகவிலகியிருப்பதால், அந்த இடத்தைப் பிடிக்க காங்கிரஸ் தீவிரமாகவே முயன்று வருகிறது.
ராஜிவ் காந்தி நினைவிடத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியில் முதல்வரையே அழைக்காமல் புறக்கணித்தகாங்கிரஸ் திமுகவுக்கு அழைப்பு விடுத்தது. மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவும் அதில் பங்கேற்றார்.
பொடா சட்டத்துக்கு எதிராக திமுக நடத்தும் சிறை நிரப்பும் போராட்டத்தை ஆதரிக்கவும் தமிழக காங்கிரசுக்குசோனியா காந்தி அனுமதி தந்துள்ளார்.
இந் நிலையில் காங்கிரஸ் தலைவர்களின் புத்தக வெளியீட்டு விழாவில் கருணாநிதி கலந்து கொள்ள சம்மதம்கொடுத்துள்ளார். பீட்டர் அல்போன்ஸ் எழுதிய நெஞ்சில் விளைந்த நெல்மணிகள் என்ற புத்தகத்தையும்,கோபண்ணா எழுதிய காமராஜர் சகாப்தம் ஆகிய நூலையும் கருணாநிதி வெளியிட உள்ளார்.
வரும் 28ம் தேதி நடக்கும் நிகழ்ச்சியில் இந்த இரு புத்தகங்களையும் கருணாநிதி வெளியிடுகிறார். இந்தநிகழ்ச்சியில் காங்கிரஸ் ஜனநாயகப் பேரவைத் தலைவர் ப.சிதம்பரமும் பங்கேற்கிறார்.
இதில் சோ.பாலகிருஷ்ணன், இளங்கோவன், வாசன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் தவிர ,இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் நல்லகண்ணு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்வரதராஜனும் கலந்துகொள்கிறார்கள்.
நிகழ்ச்சி குறித்து பீட்டர் அல்போன்ஸ் கூறுகையில்,
எங்களது அழைப்பை உடனடியாக கலைஞர் ஏற்றுக் கொண்டார். இத்தனைக்கும் எனது புத்தகத்தில் திமுகவைவிமர்சித்தும் சில கட்டுரைகள் உள்ளன. கலைஞரின் பெருந்தன்மைக்கு மிகவும் நன்றிக் கடன்பட்டுள்ளோம்.அத்தோடு எனது புத்தகத்திற்கும் கலைஞர் முன்னுரையும் எழுதித் தந்து அசர வைத்துவிட்டார் அவர்.
திமுக தலைமையில், பா.ம.க. , பா.ஜ.க. தவிர்த்த, எதிர்க் கட்சிகளின் புதிய அணி உருவாக இந்த புத்தக வெளியீட்டுவிழா அடிப்படையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந் நிலையில் பா.ம.கவை தனது பக்கம் இழுக்க ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரியும் ராமதாசுக்குநெருக்கமானவருமான வன்னிய சமுதாயதைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் மூலம் அதிமுக தீவிரமாக முயன்றுவருகிறது.
திமுகாவால் ஒதுக்கப்பட்ட பா.ஜ.கவோ பெரும் குழப்பத்தில் உள்ளது. துணைப் பிரதமர் அத்வானி கோஷ்டிஅதிமுகவுடன் கூட்டணியை விரும்பினாலும், அதில் பிரதமர் வாஜ்யாய்க்கு எள்ளவும் உடன்பாடு இல்லை.
சமீபத்தில் சென்னை வந்த வாஜ்பாய், திமுகவுடனான உறவை சீர்கெடுத்த மாநில பா.ஜ.கவினருக்கு டோஸ்கொடுத்துவிட்டுத் திரும்பியதோடு, கூட்டணியை சீர் செய்யவும் அறிவுறுத்திவிட்டுச் சென்றுள்ளார். இதனால் என்னசெய்வது என்று தெரியாமல் குழம்பிப் போய் உள்ளது மாநில பா.ஜ.க.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications