ஜெயலலிதாவைத் திட்டனால் காளிமுத்து சிரிப்பாரா?: சோ.பா. கேள்வி
சென்னை:
மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி. மணிசங்கர அய்யர் மீதான தாக்குதலைக் கண்டித்து சென்னையில் நாளைகாங்கிரஸ் கட்சி சார்பில் கண்டனக் கூட்டம் நடைபெறவுள்ளது.
காரைக்கால் அருகே அதிமுகவினரால் மணிசங்கர அய்யர் தாக்கப்பட்டார். மயிலாடுதுறையில் உள்ள அவரது கட்சிஅலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டது.
இதைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் கண்டனக் கூட்டம் நடத்தவுள்ளதாக தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர்சோ.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சென்னையில் நாளை நடைபெறும்கண்டனக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் அனைத்துத் தலைவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர். அதன் பின்னர்மாநிலம் முழுவதிலும் இத்தகைய கூட்டங்கள் நடத்தப்படும்.
மேலும், மணிசங்கர அய்யருக்கு எதிராக அதிமுகவினர் எப்படி செயல்படுகிறார்களோ, அதே போல நாங்களும்செயல்படுவோம். அவரை யாராவது தாக்கினால், நாங்களும் திருப்பித் தாக்குவோம்.
மணிசங்கர அய்யர் தன்னிடம் அசிங்கமாக பேசினார், இதற்கு அருகில் இருந்த சபாநாயகர் காளிமுத்துவே சாட்சிஎன்று முதல்வர் கூறுகிறார். இது நம்பும்படியாக இல்லை. நிகழ்ச்சி வீடியோ தொகுப்பை பார்க்கும்போது, மணிசங்கரஅய்யர் முதல்வடரிம் வந்து பணிவுடன் ஏதோ கூறுகிறார்.
அருகில் உள்ள காளிமுத்து சிரித்துக் கொண்டிருக்கிறார். முதல்வரை யாராவது அசிங்கமாக திட்டினால், அதைப்பார்த்து சிரித்துக் கொண்டா இருப்பார் காளிமுத்து?.
இவ்வாறு சோ.பா கூறினார்.
காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுத் தலைவர் கும அனந்தன் பேசுகையில், கட்சியினர் யாருக்கேனும்ஏதாவது குறைகள் இருந்தால் அதை ஒழுங்கு நடவடிக்கைக் குழுவிடம் மட்டுமே கூற வேண்டும். மாறாக,தன்னிச்சையாக பத்திரிக்கைகளுக்கு அறிக்கை கொடுத்தாலோ அல்லது நீதிமன்றங்களில் வழக்குத் தொடுத்தாலோஅவர்கள் கட்சியை விட்டே நீக்கப்படுவார்கள் என்றார்.
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications