தருமபுரி கலெக்டருக்கு நக்சல்கள் வெடிகுண்டு மிரட்டல்

Subscribe to Oneindia Tamil

தருமபுரி:

தருமபுரி மாவட்ட ஆட்சியரை கண்ணி வெடி வைத்துக் கொல்வோம் என்று மிரட்டல் கடிதம் வந்துள்ளது.இதையடுத்து அவருக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஆந்திர முதல்வர் மீது கண்ணி வெடித்தாக்குதல் நடத்திய நக்சல்கள் தமிழகத்தில் ஊடுருவாமல் தடுக்க போலீஸ்கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக நக்சல்கள் நடவடிக்கை மிகுந்த தருமபுரியில் தீவிரகண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந் நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை தருமபுரி வழியாகச் செல்லும் ரயில்களில் குண்டு வைப்போம் என்றுநக்சலைட்டுகள் மிரட்டல் கடிதம் அனுப்பியிருந்தனர். மேலும் தேன்கனிக்கோட்டை வட்டாட்சியர் அன்பரசுக்குவந்த தெலுங்கு மொழிக் கடிதத்தில்,

வரும் செவ்வாய்க்கிழமை நடக்கும் மக்கள் தொடர்பு முகாமில் பங்கேற்கும் மாவட்ட ஆட்சியர் எம்.ஏ.சித்திக் மீது,ஆந்திர முதல்வர் மீது தாக்கப்பட்டது போன்ற கண்ணி வெடித் தாக்குதல் நடத்தப்படும் என்று எழுதப்பட்டிருந்தது.இதையடுத்து அவருக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் ஆட்சியர் செல்லும் வழியில் புதிதாக இரண்டு சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+