இடைக்கால நிர்வாகம்: புலிகளின் திட்டம் 31ம் தேதி அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இடைக்கால நிர்வாகம் குறித்த தாங்கள் உருவாக்கியுள்ள திட்ட வரையறையை இம் மாதம் 31ம்வெளியிடவுள்ளதாக விடுதலைப் புலிகள் இயக்கம் அறிவித்துள்ளது.

இதன்மூலம் அமைதிப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் துவங்குவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகியுளளன.

வட கிழக்கு இலங்கையில் புலிகளின் தலைமையில் இடைக்கால நிர்வாகம் அமைக்கத் தயார் என்று அறிவித்தபிரதமர் ரணில் விக்கிரமசிங்கே அரசு அது தொடர்பாக ஒரு திட்டத்தைத் தயார் செய்து புலிகளிடம் அளித்தது.

இதில் செய்ய வேண்டிய மாறுதல்கள் குறித்து புலிகள் தங்களது சர்வதேச பிரதிநிதிகளுடன் ஆலோசனைகள் நடத்திமுடித்துள்ளனர். ஐரோப்பாவில் கடந்த இரு வாரங்களாக இந்த ஆலோசனைகளை புலிகள் நடத்தினர்.

இந் நிலையில் புலிகளின் வாய்ஸ் ஆப் ரேடியோ இன்று வெளியிட்ட செய்தியில், நாங்கள் உருவாக்கியுள்ளதிட்டத்தை வரும் 31ம் தேதி வெளியிடுவோம். இந்த வரையறைகள் நார்வே அமைதித் தூதர்களிடம் வழங்கப்படும்என்று தெரிவித்துள்ளது.

திட்ட வரையறைகளைத் தந்தவுடன் அதன் மீது அரசு செயல்படும் வரை காத்திராமல், உடனடியாக மீண்டும்பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவும் புலிகள் முன் வந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இத் தகவலை புலிகளின் கமாண்டர்கருணா தெரிவித்ததாக தமிழ்நெட் செய்தித் தளம் தெரிவிக்கிறது.

அரசு அழைத்தால் உடனே பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயார் என்று அவர் கூறியுள்ளார்.

அத்வானி- ரணில் சந்திப்பு:

இதற்கிடையே இந்தியா வந்துள்ள இலங்க்ை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே இன்று துணைப் பிரதமர்அத்வானியைச் சந்தித்துப் பேசினார்.

இச் சந்திப்புக்குப் பின் அத்வானி கூறுகையில், இலங்கை அமைதி முயற்சிகள் குறித்து ஆலோசித்தோம்.இடைக்கால நிர்வாகம் குறித்த புலிகளின் திட்டத்துக்காக இலங்கை அரசு காத்துக் கொண்டுள்ளது என்றார்.

ரணில் கூறுகையில், புலிகளின் திட்டம் கைக்கு வந்தவுடன் பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கும். இலங்கைஅமைதி முயற்சிகளுக்கு இந்தியா முழு ஆதரவு தெரிவித்துள்ளது என்றார்.

4 நாள் பயணமாக நேற்றிரவு ரணில் இந்தியா வந்தார். பிரதமர் வாஜ்பாயையும் அவர் சந்திக்கிறார். வர்த்தகம்,பாதுகாப்பு தொடர்பாக அவர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+