தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரம்: 4 பேர் பலி
சென்னை:
தமிழகம் மற்றும் புதுவையில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. மாநிலத்தின் பல இடங்களில் பலத்தமழை பெய்துள்ளது. கன மழையில் இடி தாக்கி 3 பேர் பலியாகியுள்ளனர். வீடு இடிந்து சிறுவன் பலியானான்.
வங்கக்கடலின் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.
மேலும் 48 மணி நேரங்களுக்கு ஆங்காங்கே மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது.மாநிலத்திலேயே அதிக அளவாக திருச்சி மணப்பாறையில் 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சென்னையில் நேற்றுகனமழை பெய்தது.
தமிழகம் முழுவதும் இன்றும் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்த மழைக்கு 4 பேர் பலியாகியுள்ளனர்.
ஆரணி அருகே விவசாயியின் மனைவியான லட்சுமி (வயது 30) இடி தாக்கி உயிரிழந்தார். சேலம் கொளத்தூர்அருகே அய்யாத்துரை என்பவரது மகள் தேவியும் இடி தாக்கியதில் உடல் கருகி பலியானார். தஞ்சை மாவட்டம்சீவலங்குறிச்சி என்ற இடத்தில் விவசாயி முருகானந்தம் என்பவரும் இடி தாக்கி உயிரிழந்தார்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கன மழையில் வீடு இடிந்து விழுந்ததில் சிறுவன் பால் ஸ்டீபன்ராஜ் என்பவன்உயிரிழந்தான்.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!











Click it and Unblock the Notifications