தமிழகத்துக்கு ஆண்டுக்கு 2.6 கோடி சுற்றுலாப் பயணிகள் வருகை
சென்னை:
ஆண்டுதோறும் தமிழகத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை இரண்டரை கோடியைத் தொட்டுள்ளதாகமுதல்வர் ஜெயலலிதா கூறினார்.
உள் நாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு 2.5 கோடியாகவும் வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளின்எண்ணிக்கை ஆண்டுக்கு 10 லட்சமாகவும் உயர்ந்துள்ளது. மொத்தம் 2.6 கோடி பேர் தமிழகத்தை சுற்றிப் பார்க்கவருகின்றனர் என்றார்.
சென்னையில் சர்வதேச சுற்றுலா மாநாட்டை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்த ஜெயலலிதா பேசுகையில்,
தமிழக அரசின் சீரிய நடவடிக்கைகளால் இங்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டுள்ளது. தொன்மை மிக்க கலை, கலாச்சாரம் மற்றும் வரலாற்றுச் சிறப்புகள் தமிழ்நாட்டை அழகு மிக்கசுற்றுலாத் தலமாக ஆக்கியதோடு, உலக நாடுகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
செட்டிநாட்டை சுற்றுலாத்தலமாக மாற்றி அப் பகுதியின் கட்டடக் கலை, கலாச்சார வளத்தை வெளியுலகுக்குஉணர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சென்னைக்கு ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் இருந்து வரும்விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
வருடா வருடம் இந்தியாவிற்கு சுற்றுலா வரும் பயணிகளில் 30 சதவிதத்தினரை தமிழகம் ஈர்த்துள்ளது. இதற்குகாரணம், ஒரு சுற்றுலாப் பயணி எதிர்பார்க்கும் எல்லா அம்சங்களையும் தமிழகம் தன்னகத்தே கொண்டுள்ளது தான்என்றார் ஜெயலலிதா.
-
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
ரூ.2500 உரிமைத்தொகை எப்போது கிடைக்கும்? நிதியமைச்சர் மரியவில்சன் கொடுத்த அப்டேட்! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
தவெகவில் இணைந்தவர்களை கைவிட மாட்டோம்.. அதிமுகவினருக்கு மறைமுக சிக்னல் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
திருச்சி கிழக்கில் வெல்லமண்டி நடராஜன் போட்டி? அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் கொடுத்த க்ரீன் சிக்னல்! -
ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் சந்திக்காதது ஏன்? பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த விளக்கம்! -
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
'பவர்’ தந்த மக்களுக்கு ’பவர்கட்’ பரிசு.. என்ன துறை என்றே தெரியாத அமைச்சர்கள்! விட்டு விளாசிய தமிழிசை












Click it and Unblock the Notifications