சென்னையில் முகமூடிக் கொள்ளை: திருடிய பின் காலில் விழுந்த கொள்ளையர்கள்
சென்னை:
ஏழைகளுக்கு தானமாக வழங்கப் போவதாக கூறி பட்டுச் சேலைகள், வைர நகைகள் உள்ளிட்ட பல லட்சம்மதிப்புள்ள பொருட்களை 3 பேர் கொண்ட கும்பல் திருடிச் சென்றுள்ளது.
சென்னை போரூரை அடுத்துள்ளது காரப்பாக்கம். இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் சாவித்திரி அம்மாள். இவரதுகணவர் இரு வாரங்களுக்கு முன் இறந்து விட்டார். அவரது 13-வது நாள் காரியம் நேற்று நடந்தது. இதற்காகஉறவினர்களும் வந்திருந்தனர்.
இந் நிலையில் முகமூடி அணிந்த 3 பேர் சாவித்திரி அம்மாளின் வீட்டுக்குள் நுழைந்தனர். வீட்டை உள்பக்கமாகப்பூட்டிய அவர்கள் பளபளக்கும் பட்டாக் கத்திகளைக் காட்டி உறவினர்களை மிரட்டி ஒரு அறையில் தள்ளிஅடைத்தனர்.
சத்தம் போட்டால் வெட்டிக் கொல்வோம் என மிரட்டியதால் அனைவரும் வாயை மூடி அமைதியாக இருந்தனர்.
பின்னர் சாவித்திரி மற்றும் உறவினர்களை மிரட்டி அவர்கள் அணிந்திருந்த தங்க, வைர நகைகள், வீட்டில் இருந்தபட்டுச் சேலைகளை அந்தக் கும்பல் பறித்துக் கொண்டது.
இதையடுத்து வெளியே கிளம்பிய திருடர்கள், சாவித்திரி அம்மாளின் காலில் விழுந்தனர்.
இதைக் கண்டு அவர் திடுக்கிட்டார். தங்களை ஆசிர்வதிக்குமாறு கூறிய திருடர்கள், இதை நாங்கள் எங்களுக்காகத்திருடவில்லை. ஏழைகளுக்கும், இல்லாதவர்களுக்கும் தானம் வழங்குவதற்காக எடுத்துச் செல்கிறோம். எங்களைமன்னித்து விடுங்கள் என்று கூறி விட்டுத் தப்பிச் சென்றனர்.
பட்டப் பகலில் நடந்த இச் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications