ரூ. 4 லட்சம் பணம் கேட்டு மாணவன் கடத்தி கொலை: ஆற்றங்கரையில் பிணம் புதைப்பு
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பள்ளி மாணவனைக் கடத்திச் சென்று ரூ. 4 லட்சம் பணம் கேட்டு மிரட்டியகும்பல் பின்னர் அவனைக் கொலை செய்து உடலைப் புதைத்துள்ளது.
இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆதூர் துலுக்கனூரைச் சேர்ந்த முத்துசாமி. இவர் அந்தப் பகுதியில் லட்சக்கணக்கில் வட்டிக்குப் பணம் கொடுத்துவருகிறார். இதனால் அவரிடம் ஏகப்பட்ட பணப் புழக்கம் உண்டு.
இவரது இளைய மகன் கண்ணன் (வயது 9). நான்காம் வகுப்பு படித்து வந்த இவன் கடந்த 16ம் தேதி பள்ளியில்இருந்து வீடு திரும்பவில்லை. இதையடுத்து காவல் நிலையத்தில் புகார் தரப்பட்டது. இந் நிலையில் 18ம் தேதிகண்ணன் படிக்கும் பள்ளிக்கு மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது.
இஅதில் பேசியவர்கள், கண்ணனை தாங்கள் கடத்திச் சென்றுள்ளதாகவும் கண்ணனின் தந்தையுடன் பேசவேண்டும் என்றும் கூறினர். இதையடுத்து அவரை பள்ளி நிர்வாகிகள் அழைத்து வந்தனர். மீண்டும் தொலைபேசிஅழைப்பு வந்தது.
அதில் பேசியவர்கள், நாங்கள் சென்னையில் இருந்து பேசுகிறோம். ரூ. 4 லட்சம் தந்துவிட்டு கண்ணனை மீட்டுச்செல்லலாம் என்று கூறினர்.
இதை காவல் நிலையத்தில் போலீசார் தெரிவித்தனர். மீண்டும் அந்தக் கும்பல் தொலைபேசியில் பேசியது.அப்போது, ரூ. 20,000 தருவதாக முத்துசாமி கூறினார். அதை அக் கும்பல் ஏற்கவில்லை.
இந் நிலையில் 19ம் தேதி அவரைத் தொடர்பு கொண்ட கடத்தல் கும்பல் ரூ. 3 லட்சம் தருமாறு கேட்டனர். இந்தத்தொலைபேசி அழைப்புகளை போலீசார் ஒட்டு கேட்டனர். மேலும் காலர் ஐடி மூலம் இந்த அழைப்பு பக்கத்தில்உள்ள கெங்கவல்லி என்ற கிராமத்தில் இருந்து வந்ததையும் அறிந்தனர்.
இதையடுத்து போலீசார் அங்குள்ள எஸ்.டி.டி. பூத்தில் விசாரணை நடத்தி ராஜா (21), அய்யப்பன் (24) ஆகியஇருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது கண்ணனைக் கடத்தியதை ஒப்புக்கொண்டனர்.
மேலும் 16ம் தேதியே கண்ணனை கழுத்தை நெறித்துக் கொலை செய்து ஆற்றங்கரையில் புதைத்துவிட்டதாகவும்கூறினர்.
இதைத் தொடர்ந்து கண்ணனின் உடலை போலீசார் ஆற்றங்கரையில் இருந்து தோண்டி எடுத்தனர். கை, கால்கள்கட்டப்பட்ட நிலையில் கண்ணன் புதைக்கப்பட்டிருந்தான்.
இந்தக் கொலைக் கும்பல் முத்துசாமியிடம் வட்டிக்குப் பணம் வாங்கிவிட்டு பணத்தைத் திருப்பித் தராமல்இருந்துள்ளது. இதனால் முத்துசாமி மிரட்டவே அவரது மகனைக் கடத்தி பணம் பறிக்க முடிவு செய்துள்ளனர்.
அந்தச் சிறுவன் தங்களைக் காட்டிக் கொடுத்தால் கைதாகி விடுவோம் என்பதால் அவனைக் கொலைசெய்துள்ளனர்.
இந்தக் கொலைக்குக்கும் கடத்தலுக்கும் திட்டம் போட்டுத் தந்த மாணிக்கம் என்பவைனயும் போலீசார் கைதுசெய்துள்ளனர்.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு












Click it and Unblock the Notifications