அதிமுகவின் கோஷ்டி மோதல்: பட்டியல் வெளியிட்டது காங்கிரஸ்
சென்னை:
காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி மோதல்களும், வேட்டி- சட்டை கிழிப்புகளும் சகஜம் என்று முதல்வர் ஜெயலலிதாபேசியுள்ளதற்கு அந்தக் கட்சி பதிலடி தந்துள்ளது. அத்தோடு அதிமுகவில் நிலவி வரும் கோஷ்டிப் பூசல்விவரத்தையும் விலாவாரியாக வெளியிட்டுள்ளது.
இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பொன்.கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:
அதிமுகவில் மாவட்டச் செயலாளர்ரகளுக்கும் அந்தந்த மாவட்ட மந்திரிகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்துவருகிறது. அதே போல அமைச்சர்கள் இடையிலும் சண்டை நடந்து வருகிறது. இதோ அதன் பட்டியல்:
அதிமுக தலைமைக் கழகத்தில் அவைத் தலைவரான நிதியமைச்சர் பொன்னையனுக்கும் அமைச்சர்ஜெயக்குமாருக்கும் பனிப்போர். அங்கு மாடியில் இருக்கும் ஓ.எஸ்.மணியனுக்கும் கீழே இருக்கும் பெஞ்ச் கிளார்க்சேகருக்கும் ஈகோ சண்டை.
வட சென்னையில் மாவட்டச் செயலாளர் சேகர் பாபுவின் ஆட்களும் மந்திரி ஜெயக்குமாரின் கோஷ்டிக்கும்அடிதடி.
மத்திய சென்னையில் மாவட்டச் செயலாளர் பாலங்கா மற்றும் கோதண்டராமன் இடையே நடக்கும் சண்டை.
தென் சென்னையில் துணை மேயர் கராத்தே தியாகராஜனுக்கும், மாவட்டச் செயலாளர் ஆதிராஜாராமுக்கும்இடையே நடக்கும் மோதல்.
செங்கல்பட்டில் மந்திரி வளர்மதிக்கும் முன்னாள் மாவட்ட செயலாளர் வரதராஜனுக்கும் இடையே நடக்கும் யார்பெரியவர் சண்டை.
விழுப்புரத்தில் மந்திரி சம்பத், மாவட்டச் செயலாளருக்கு இடையே நடக்கும் தகராறு.
புதுக்கோட்டையில் அமைச்சர் ராதாகிருஷ்ணன், மாணவர் அணிச் செயலாளரும் எம்.எல்.ஏவுமானவிஜயபாஸ்கரும் போடும் குஸ்தி சண்டை.
சிவகங்கையில் திடீர் மாஜி மந்திரி வ.து. நடராஜனுக்கும் எம்.பி. கோகுல இந்திராவுக்கும் நடக்கும் குழாயடிசண்டை.
திருவண்ணாமலையில் அமைச்சர் ராமச்சந்திரன், மாவட்டச் செயலாளரக் அக்ரி கிருஷ்ணமூர்த்தி இடையிலானமோதல்.
குமரியில் அமைச்சர் தளவாய், எம்.எல்.ஏ. லாரன்ஸ் இடையே நடக்கும் யுத்தம்.
நெல்லையில் அமைச்சர் நயினார் மற்றும் சுப்பையா பிள்ளையின் ஆட்கள் கட்டி உருண்டு சண்டை போட்டது.
திண்டுக்கல்லில் எம்.பி. சீனிவாசன், அமைச்சர் விஸ்வநாதனின் அதிகார சண்டை.
இப்படி தனது கட்சியில் ஆயிரம் ஓட்டைகளை வைத்துக் கொண்டு காங்கிரசுக்கு அறிவுரை சொல்வதை ஜெயலலிதாநிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications