அதிமுக, ஜெயா டிவிக்கு தடை கோரி வழக்கு: கமிஷ்னருக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!
சென்னை
வன்முறைச் செயல்களில் ஈடுபட்டு வரும் அதிமுகவுக்கும், அந்த செயல்களை நியாயப்படுத்தி செய்திகள்வெளியிடும் ஜெயா டிவிக்கும் தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதையடுத்து இது தொடர்பாக பதில் தருமாறு சென்னை மாநகர காவல்துறை ஆணையர் உள்பட 3 பேருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
திமுகவை தடை செய்ய வேண்டும் என்றும் சன் டிவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி கடந்தமாதம் உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணையில் உள்ளது.
இந்நிலையில், அதிமுக மற்றும் ஜெயா டிவிக்கு எதிராக மயிலாடுதுறையைச் சேர்ந்த அலெக்சாண்டர் என்பவர் மனுதாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
கடந்த அதிமுக ஆட்சியில் அப்போது மத்திய அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் அதிமுகவினரால் திருச்சியில்தாக்கப்பட்டார். கவர்னராக இருந்த சென்னாரெட்டியின் கார் மீது விழுப்புரத்தில் தாக்குதல் நடந்தது.சென்னாரெட்டி அதிர்ஷ்டவசமாய் உயிர் தப்பினார்.
தர்மபுரி அருகே விவசாயக் கல்லூரி மாணவிகளை அதிமுகவினர் எரித்துக் கொன்றனர்.
முன்னாள் எம்.பி. சுப்ரமணியம் சுவாமி உயர் நீதிமன்றத்துக்கு வந்தபோது அவரை சூழ்ந்து கொண்டு ஆபாசம்காட்டினர் அதிமுக மகளிர் அணியினர். இப்போது உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் ஏ.ஆர்.லட்சுமணனின்மருமகனை கைது செய்து அவர் மீது பொய்யாக கஞ்சா வழக்கு போட்டனர். முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர்சேஷன் தாக்கப்பட்டார்.
கடந்த அதிமுக ஆட்சியைப் போலவே இந்த ஆட்சியிலும் அந்தக் கட்சியினர் தொடர்ந்து வன்முறைச் செயல்களில்ஈடுபட்டு வருகின்றனர்.
எதிர்க் கட்சியினர், பத்திரிக்கை ஆசிரியர் மீது பொடா சட்டத்தை துஷ்பிரயோகம் செய்வது, மணிசங்கர அய்யர்போன்ற மக்கள் பிரதிநிதிகளைத் தாக்குவது போன்ற அடாவடிச் செயல்கள் அதிகரித்து விட்டன. யாருக்கும்எப்போதும் மரணம் நேரலாம் என்கிற பயம் உள்ளது. என்கவுன்டர்கள் நடக்கிறது. அதிமுக என்றாலே வன்முறைக்கலாச்சாரம் என்றாகிவிட்டது. அதிமுகவுக்கு ஜனநாயகத்திலும், சட்டத்திலும் நம்பிக்கையில்லை.
இந்தக் கட்சியின் செயல்பாடுகளை நியாயப்படுத்தி, மக்கள் மத்தியில் தவறான செய்திகளை ஒளிபரப்பியும்வருகிறது ஜெயா டிவி. எனவே அதிமுகவுக்கும், ஜெயா டிவிக்கும் தடை விதிக்க வேண்டும் என்று தனது மனுவில்கோரியுள்ளார் அலெக்சாண்டர்.
இந்த மனுவைப் பரிசீலித்த தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி குலசேகரன் ஆகியோர் அடங்கிய டிவிஷன்பெஞ்ச் மத்திய தகவல் ஒளிபரப்புத் துறைச் செயலாளர், சென்னை மாநகர காவல்துறை ஆணையர் உள்ளிட்ட 3பேருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். வழக்கு அடுத்த வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications