பள்ளி சிறுமியை நரபலி தந்த போலி சாமியார் தற்கொலை: சேலம் அருகே கொடூரம்
சேலம்:
பள்ளிச் சிறுமியை துர்தேவதைக்கு படையல் வைத்து பிணத்தை தீ வைத்து எரித்து தலைமறைவான கொடூர நரபலிசாமியார் தற்கொலை செய்து கொண்டார்.
சேலத்தை அடுத்துள்ள மஞ்சவாடி கணவாய்க் கட்டுப்பகுதியில் எரிந்த நிலையில் மண்டையோடும், எலும்புத்துண்டுகளும் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அவற்றைக் கைப்பற்றிய போலீஸார் அடையாளம்தெரியாத பிணம் என்ற முடிவுக்கு வர நினைத்தனர்.
சேலம் போலீஸ் எஸ்.பி. பொன் மாணிக்கவேல் பதவி ஏற்றபின் பழைய வழக்குகள் கிளறப்பட்டன. அவர்உத்தரவுப்படி இந்த வழக்கு குறித்து விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் மண்டையோடுமற்றும் எலும்புத்துணடுகளை தடய அறிவியல் ஆய்வகத்தின் மானுடப் பிரிவுக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு நடந்த ஆய்வில் மண்டையோடு 13 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுமியினுடையது என்று தெரிய வந்தது.இதையடுத்து தீவிர புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. தமிழகம் முழுவதும் காணாமல் போன சிறுமியர்பட்டியல் தயாரிக்கப்பட்டது.
அப்போது சேலம் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 10ம் தேதி சிறுமி காணாமல்போனதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த வழக்கை போலீசார் மறு விசாரணை செய்தபோது.காணாமல் போன சிறுமியின் தாய் சேலம் சின்ன திருப்பதியைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்று தெரியவந்தது.
இவரது கணவர் சிவஞானம் கூலித் தொழிலாளியாவார். இவர்களுக்கு நித்யா, கிரிஜா, பிரகாஷ் என்ற மகனும்இருந்தனர்.
குடிப் பழக்கத்துக்கு அடிமையான சிவஞானத்தை திருத்த நினைத்த ராஜேஸ்வரி சேலம் அரசமரத்துக் காட்டூரைச்சேர்ந்த மாந்திரவாதியான செல்வம் (40) என்பவனிடம் அழைத்துச் சென்றார்.
அப்போது, ராஜேஸ்வரியின் அழகில் மயங்கிய செல்வம் அவரை மடக்கி உல்லாசமாக இருந்துள்ளான். இறுதியில்ராஜேஸ்வரி தனது குடும்பத்தையே விட்டு செல்வத்துடன் ஐக்கியமானார். ஆனால், 6 மாதத்தில், சாமியாரைவிட்டுவிட்டு மீண்டும் தனது குடும்பத்துடன் வந்து சேர்ந்து கொண்டார்.
இதனால், ஆத்திரமடைந்த செல்வம் மணக்காடு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த நித்யாவைக்கடத்தினான்.
நித்யா லீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த ராஜேஸ்வரி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இதற்கிடையேராஜேஸ்வரியைத் தொடர்ப கொண்ட செல்வம், உனது மகள் நித்யா என்னிடம் இருக்கிறாள். அவளை ஒப்படைக்கவேண்டுமானால் நீ என்னிடம் வந்து விட வேண்டும் என்று கூறியுள்ளான்.
மகளை உயிருடன் மீட்கும் எண்ணத்தில் அவன் மிரட்டலுக்குப் பணிந்து அவனுடன் மீண்டும் வசிக்கச் சென்றார்ராஜேஸ்வரி. ஆனால், நிதியாவை அவன் காட்டவில்லை. இதையடுத்து ஆத்திரமடைந்த ராஜேஸ்வரி போலீஸில்புகார் கூறப்போவதாக மிரட்டியுள்ளார்.
இதையடுத்து தப்ப முயன்ற செல்வத்தை மாம்பாடி கிராமத்து மக்கள் இரவோடு இரவாகப் பிடித்து அடித்துஉதைத்தனர். அடிதாங்காத செல்வம் நடந்த உண்மைகளைக் கூறினான். அவன் கூறிய தகவல் அனைவரையும்திகிலுறச் செய்தது.
அவனது வாக்குமூல விவரம்:
ராஜேஸ்வரியை அடைவதற்காக அவரது மகள் நித்யாவைக் கடத்தி மஞ்சவாடிக் கணவாய் அருகே உள்ள ஆள்நடமாட்டமில்லாத களிமண் திட்டு ஏரிக்கு அழைத்துச் சென்றேன். நித்யாவை துர்தேவத்ைக்கு நரபலி கொடுத்தால்என் எண்ணம் நிறைவேறும் என்று நினைத்தேன். அவளைக் கொல்லும் முன் கற்பழித்து விடலாம் என நினைத்துகற்பழித்தேன்.
அப்போது நித்யா மயங்கி விழுந்தாள். பின் களிமண்ணால் துர்தேவதை சிலை செய்து மயங்கியிருந்த நித்யாவைசிலைக்கு முன் நிறுத்தி அவள் தலையில் உருட்டுக் கட்டையால் அடித்துக் கொன்று துர்தேவதைக்கு நரபலிகொடுத்தேன். பின்னர் பிணத்துக்கு தீ வைத்து எரித்தேன் என்றான்.
இதையடுத்து விடிந்ததும் ஊர்மக்கள் அவனை காவல் நிலையத்தில் ஒப்படைக்க நினைத்துள்ளனர். ஆனால் இரவில்தப்பியோடிய செல்வம் தர்மபுரி மாவட்டம் வீரப்பநாயக்கன்பட்டி முனீஸ்வரன் கோவில் அருகே காரப்பாடியில்விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டான்.
செல்வத்தின் தற்கொலையால் இந்த வழக்கு முடிவுக்கு வந்துவிட்டாலும் அவனது கள்ளக் காதலிகள் மணிமேகலை,ராணி ஆகியோரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications